3 தெருவோர நாய்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டன. அவற்றின் பெயர் Porter,Monty மற்றும் Ginnie. 8 வாரங்களுக்குள், இம்மூன்று நாய்கள் மர வாகனத்தை ஓட்டும் வழிமுறையைக் கற்றுக் கொண்டு விட்டன. அது மக்களை வியப்படையச் செய்துள்ளது.
நாய்கள் பல்வேறு செயல்களை மேற்கொள்ள இச்சங்கத்தின் பணியாளர்கள் கற்று கொடுக்கிறார்கள். அவற்றின் நடைமுறைப் போக்கு மிக முக்கியமானது. இம்மூன்று நாய்கள் கடமையை நன்றாக நிறைவேற்றியுள்ளன. பணியாளர்களில் ஒருவர் Mark Vette இப்போது மனம் நிம்மதியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இது மக்களின் மனதில் ஆழப்பதிய வேண்டும் என்று இச்சங்கம் விரும்புகின்றது. மக்கள் தெருவோர நாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது இச்சங்கத்தின் விருப்பமாகும்.