உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக, சீனாவின் தேசியப் பாதுகாப்பு வரவுச் செலவு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கிழக்கு கடல் மற்றும் சீனத் தென் கடல் பரப்பில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் முதலிய அண்டை நாடுகளுடன் உரிமை பிரதேசப் பிரச்சினைகள் நிலவுவதால், தேசியப் பாதுகாப்பு வரவுச் செலவின் அதிகரிப்பு, சீன ராணுவ நவீனமயமாக்க வளர்ச்சியைத் தூண்டுவதோடு, ஆசிய-பசிபிக் அமைப்புக்கும், இப்பிரதேசத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டுக்கும் முக்கியமான செல்வாக்கை ஏற்படுத்தும் என்று தினமணி 6ஆம் நாள் வெளியிட்ட செய்தி கூறியுள்ளது.