சீன அரசவை வாரியங்களின் சீர்திருத்தம் மற்றும் கடப்பாட்டு மாற்றத் திட்டம் 10-ஆம் நாள் காலை வெளியிடப்பட்டது. இத்திட்டப்படி, சீன இருப்புப் பாதை அமைச்சகம், சீனச் சுகாதார அமைச்சகம் முதலியவை நீக்கப்படும். சீனத் தேசிய உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக தலைமை பணியம், சீனத் தேசியப் பதிப்புரிமை, வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் முதிலியவை புதிதாக உருவாக்கப்படும். சீன அரசவை வாரியங்களின் 7வது சீர்திருத்தம் துவங்கியுள்ளது என்று இது தெரிவிகிறது. அரச கடப்பாட்டின் மாற்றம், நிர்வாக அமைப்பு முறையின் சீர்த்திருத்தத்தை ஆழமாக்குவதை மையமாகக் கொண்டுள்ளது. பல்வகை உகந்த விவகாரங்களில் தலையீட்டை குறைப்பது, இச்சீர்திருத்தத்தின் முக்கிய இலக்காகும் என்று சீன அரசவை உறுப்பினரும் அரசவையின் பொதுச் செயலாளருமான மா கேய் கூறினார்.
10-ஆம் நாள் காலை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் முழு அமர்வில், சீன அரசவை வாரியங்களின் சீர்திருத்தம் மற்றும் கடப்பாட்டு மாற்றத் திட்டத்தைப் பற்றி, மா கேய் விளக்கம் கூறினார். சீனாவின் தற்போதைய நிர்வாக அமைப்பு முறைக்கு இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் பாதுகாப்புப் பிரச்சினை பல முறை நிகழ்ந்துள்ளது குறித்து, பொது மக்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். பல வாரியங்கள், பல்வேறு கட்டங்களில், உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் நிர்வாக வழிமுறை, உணவுப் பொருட்களின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தைப் பாதிக்கும் முக்கிய தடையாகும் என்று சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ரோ யுன் போ கருதுகின்றார்.
இப்பிரச்சினையைத் தீர்க்க, சீனத் தேசிய உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக தலைமையகம் புதிதாக உருவாக்கப்படும். உற்பத்தி, போக்குவரத்து, நுகர்வு முதலிய துறைகளில், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் பாதுகாப்புக்கு, இத்தலைமைப்பணியகம், ஒட்டுமொத்தமான பயனுள்ள கண்காணிப்பு மேற்கொண்டு நிர்வாகிக்கும். இது, உணவுகள் மற்றும் மருந்து பாதுகாப்பு நிலைமையை உயர்த்தும்.
இச்சீர்திருத்தம், 1982-ஆம் ஆண்டுக்குப் பின் சீன அரசவை வாரியங்களில் மேற்கொள்ளப்பட்ட 7வது சீர்திருத்தமாகும். ஒட்டுமொத்தமாக, இச்சீர்திருத்தத்தின் மூலம், சமூகம் கவனம் செலுத்துகின்ற சில முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும். தவிர, எளிதான வழிமுறைகளில் சில வாரியங்களை நீக்கி, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இச்சீர்திருத்தத்தின் இலக்கு அல்ல. கடப்பாடும் உரிமையும் ஒருமனதாக நிலைநிறுத்தும் பயனுள்ள அரசை உருவாக்குவது என்பது தான், இச்சீர்திருத்த்த்தின் முக்கிய இலக்காகும்.
தவிர, இச்சீர்திருத்தத்தின் எதிர்காலம் குறித்து, மா கேய் கூறியதாவது:
அரசவை வாரியங்களின் கடப்பாட்டின் மாற்றத்தை முன்னேற்றி, தெளிவான உரிமைகளின் உருவாக்கம், நியாயமான நிர்வாகம் மற்றும் சட்ட உத்தரவாதம் முதலிய தனிச்சிறப்புகள் வாய்ந்த அரசவையின் உருவாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.