இவ்வாண்டு, காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டப்பணியை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும் என்று சீனத் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைத் தலைவர் வூ சியாவ்சிங் அண்மையில் தெரிவித்தார்.
கடுமையான மாசுபாடு பிரதேசத்தில், நிலக்கரிகளின் நுகர்வு அளவின் கட்டுப்பாடு உட்பட பல நடவடிக்கைகளை அவர் 12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துக்கூறினார்.
காற்று மாசு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் திருத்தத்தையும், பல்வேறு உள்ளூர் நிலை அரசுகள், காற்று மாசு கட்டுப்பாட்டுப் பொறுப்பைச் செயல்படுத்துவதையும் ஆக்கமுடன் தூண்ட வேண்டும் என்றும் வூ சியாவ்சிங் தெரிவித்தார்.