12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் தலைமைக் குழு, 16-ஆம் நாள் முற்பகல், பெயஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் 8வது கூட்டம் நடத்தியது.
15-ஆம் நாள் பிற்பகல் முதல் 16-ஆம் நாள் முற்பகல் வரை, சீன துணைத் தலைவர்கள், அரசவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சீன மக்கள் வங்கியின் தலைவர் முதலிய வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள் விவாதித்தன. இப்பெயர் பட்டியலை தேசிய மக்கள் பேரவையின் முழு அமர்வின் வாக்கெடுப்பிற்கு ஒப்படைக்க தலைமைக் குழு முடிவு செய்தது.
தவிர, பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள், இக்கூட்டத்தொடரில் பல்வேறு வரைவு தீர்மானங்களை உணர்வுபூர்வமாக பரிசீலனை செய்தன. அரசு பணியறிக்கை, 2012-ஆம் ஆண்டு தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாடு மற்றும் 2013-ஆம் ஆண்டு தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டம் முதலிய 6 வரைவு தீர்மானங்களை, முழு அமர்வின் வாக்கெடுப்பிற்கு ஒப்படைக்க தலைமைக் குழு முடிவு செய்தது.