12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம் 17ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிசின்பீங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடரில், அரசுப் பணியறிக்கை பற்றிய தீர்மானமும், இப்பணியறிக்கையும் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2012ம் ஆண்டு நடுவண் அரசு மற்றும் உள்ளூரின் வரவு செலவு செயல் அறிக்கை பற்றிய தீர்மானமும், 2013ம் ஆண்டின் வரவுசெலவும் இக்கூட்டத்தொடரில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.