அரசு செயற்திறனை மாற்றுவதற்கு, மனவுறுதி இருக்க வேண்டும். உறுதியளித்த படி செயல்படுத்த வேண்டும் என்று, சீனத் தலைமையமைச்சர் லீ கேச்சியாங் 17ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசுச் செயற்திறன் மாற்றம், இந்த நிறுவனச் சீர்திருத்தத் திட்டத்தின் மைய உள்ளடக்கமாகும். குடிமைப்பணிப் பரிசீலனை மற்றும் ஒப்புதல் விதிமுறைகளைச் சீர்திருத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.