சீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருந்தியது. உலக அமைதி வளர்ச்சிப் போக்கிற்கும் பொருந்தியது என்று சீனத் தலைமையமைச்சர் லீ கேச்சியாங் 17ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீனாவின் புதிய அரசு, முன்பை போல் சீன அமெரிக்க உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும். ஒபாமா அரசுடன் கூட்டாக, புதிய ரக நாட்டுறவை உருவாக்க விரும்புவதாக, லீ கேச்சியாங் தெரிவித்தார்.
கள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், சீனா இச்செயலுக்கு ஆதரவு அளிக்காதது மட்டுமல்ல, இத்தாக்குதல் செயலை எதிர்க்கிறது என்றும் லீ கேச்சியாங் கூறினார்.