சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவுடன் 16-ஆம் நாள் பிற்பகல் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டார்.
சீன அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷீ ச்சின்பிங்கிற்கு ராஜபக்சே வாழ்த்து தெரிவித்தார். இலங்கையின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சீன அரசுரிமை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகளில், இலங்கை சீனாவுக்கு உறுதியான ஆதரவு அளித்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
வாழ்த்துக்கு ஷீ ச்சின்பிங் நன்றி தெரிவித்தார். சீனாவும் இலங்கையும், பாரம்பரிய நட்பு அயல் நாடுகளாக உள்ளன. பல ஆண்டுகளாக, இரு நாட்டுறவு சீராகவும் நிலையாகவும் வளர்ந்து வருகின்றது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு மூலம், இரு நாடுகளும் பயனுள்ள சாதனைகளைப் பெற்றுள்ளன என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், இலங்கையுடனான உறவின் வளர்ச்சிக்கு சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கிடை பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு வர இரு நாடுகளும் பாடுபட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.