சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீனக் கனவை நனவாக்கத் துவங்கும் புதிய பயணம் எனும் விமர்சனக் கட்டுரையை சீன மக்கள் நாளேடு 18ஆம் நாள் வெளியிட்டு இக்கூட்டத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள், சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியுடன் மிக முக்கியமானவை. கடந்த 5 ஆண்டுகளின் சாதனைகளையும் அனுபவங்களையும் தொகுத்து, எதிர்கால கடமைகளை திட்டமிட்டுள்ளது. நாட்டின் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றி, சோஷலிச நவீனமயமாக்கக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு, அது முக்கிய உத்தரவாதமளிக்கிறது.
புதிய வளர்ச்சிப் போக்கு துவங்கியுள்ளது. சீனக் கனவை நனவாக்குவது, சீன மக்களின் பொது விருப்பமாகும். இக்கனவை நனவாக்க, நாட்டின் செழுமை, இனத்தின் வளர்ச்சி, மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை நனவாக்க வேண்டும் என்று இக்கட்டுரை சுட்டிக்காடுகிறது.