சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், 12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்களின் நிறைவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைவர் லியாங் சென் யின், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைவர் சிவெய் சி ஆன் இருவரையும் 18ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் சந்தித்துரையாடினார்.
ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்கள், சீனாவின் பெருநிலப் பகுதியுடன் நெருக்கம் இணைந்து, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி எனும் பொதுக் கனவைக் கொள்கின்றன. மூன்று தரப்புகளும் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்து, கூட்டு வளர்ச்சியை கையோடு கை கோர்த்து நனவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் வலியுறுத்தினார்.