இவ்வாண்டு ஜுன் திங்கள் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறும். இதை முன்னிட்டு, சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டும் வகையில், இப்பொருட்காட்சிக்குத் தலைப்புப் பாடல் சேகரிப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. சீன வானொலி நிலையமும் குன்மிங் நகரமும் தெற்காசிய பிரதேசத்தின் பல்வேறு துறையினர்களிடையில் தலைப்புப் பாடலையும் பாடல் வரிகளையும் சேகரிக்கும்.
இந்தப் பாடல் மற்றும் பாடல் வரிகள், அருமையான இராயகமும் ஆழ்ந்த அர்த்தமுள்ள உள்ளட்டக்கமும் கொண்டு, ஒன்றுக்கொன்று திறப்பு, நடைமுறை ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று நலன் மற்றும் கூட்டு வெற்றி, இசைவான வளர்ச்சி ஆகியவை படைக்கும் சீன-தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்த வேண்டும். யுன்னான் மற்றும் தெற்காசிய நாடுகளின் வண்ணமயமான தேசிய இனப் பண்பாட்டையும் பண்பாட்டுடன் நெருங்கிய பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மொழி, பாணி மற்றும் வடிவம் எந்த கட்டுப்பாடுமின்றி உயர் கலை வெளிப்பாட்டுடன், வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணியிலுள்ள இரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரவது போல இப்பாடல் அமைய வேண்டும்.
தமிழ் நண்பர்களை இந்தப் பாடல் சேகரிப்பு நடவடிக்கையில் ஆக்கமுடன் கலந்து கொள்ள வரவேற்கின்றோம். உங்கள் படைப்பை இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் நாளுக்கு முன் வான் அல்லது மின்னஞ்சல் மூலம் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு அனுப்பலாம்.
வான் அஞ்சல் முகவரி: TAMIL SERVICE, CRI-9, CHINA RADIO INTERNATIONAL, P.O. Box 4216, BEIJING, P.R.CHINA 100040
மின்னஞ்சல் முகவரி: tamil@cri.com.cn
பாடல் தெரிவுச் செய்யப்படக் கொடுக்கப்படும் பொருட்களில், ஒலிப்பதிவு, பாடலின் இசை மற்றும் வரிகள், படைப்பாளரின் அறிமுகம் மற்றும் தொடர்பு முறை என அனைத்து தகவல்களும் இடம்பெற வேண்டும் என்பதை கவனியுங்கள்.
முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்பு பாடல் சேகரிப்பு நடவடிக்கையில், 10 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு மே 6ஆம் நாள் வெளியிடப்படும். அவற்றில் தலைப்புப் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொருட்காட்சியின் துவக்க விழாவில் பாடப்படும். சிறந்த படைப்புகள் அனைத்துக்கும் சான்றிதழும் பரிசும் கிடைக்கும். இந்தப் பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் அவை பாடப்பட்டு பரப்புரையும் செய்யப்படும்.
இந்நடவடிக்கை பற்றி மேலும் அறிந்து கொள்ள, தொலைபேசி மூலம் தமிழ்ப்பிரிவுடன் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 8610-68892363