அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24வது கருத்தரங்கு, திருச்சி அண்ணாநகர் மற்றும் பாண்டிசேரி சீன வானொலி நேயர் மன்றங்கள் வெற்றிகரமாக நடத்துவதற்கு நல்வாழ்த்து தெரிவிக்கிறேன். அதேவேளை, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் பணியாளர் அனைவரின் சார்பில் கடந்த பல ஆண்டுகளில் தமிழ் நேயர்களின் பலமான ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்கிறேன்.
24வது நேயர் கருத்தரங்கு பற்றிய ஒலிப்பதிவு மற்றும் புகைப்படங்களை அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் எஸ்.செல்வம் அனுப்பியுள்ளார். தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் இந்தக் கருத்தரங்கிற்கான சிறப்பு பகுதி வடிவமைத்துள்ளோம். பார்த்து, கேட்டு ரசியுங்கள். குறிப்பாக, 24வது கருத்தரங்கில் கலந்துகொள்ளாத நேயர்கள் கருத்தரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாண்டு ஆக்ஸ்ட் திங்கள் முதல் நாள், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கிய 50வது ஆண்டு நிறைவு ஆகும். இந்தப் பொன் விழாவை முன்னிட்டு, தமிழ்ப்பிரிவு பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அனைத்து நேயர்களும் இவற்றில் பங்கெடுப்பதை வரவேற்கின்றோம்.
எதிர்காலத்தில் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சிக்கு நேயர் நண்பர்களுடன் இணைந்து கூட்டாக முயற்சிப்போம்.
அனைத்து நேயர்களுக்கு மீண்டும் நன்றிகள்!
அன்புடன்,
கலைமகள்
தமிழ்ப்பிரிவுத் தலைவர்
சீன வானொலி