அவர் 1928ஆம் ஆண்டு, இக்கடமையைத் துவங்கினார். முதன்முதலாக, அவர் மலையில் 0.01 சதுரக் கிலோமீட்டர் வாய்ந்த ஒரு பெரிய குழியைக் குடைந்து, பல்வேறு கழிவுப் பொருட்களை அக்குழியில் போட்டார். பின்னர், அவர் அந்தக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, கதவு, கட்டிடம், நீரூற்று, வழி ஆகியவற்றைக் கட்டினார். அவர் பயன்படுத்திய கழிவுப் பொருட்களில், கல், பீர் புட்டி, மோட்டார் உதிரிப்பாகங்கள், பழைய அடுப்புகள், கூரை ஓடுகள் ஆகியவை அடங்கின. இந்த வீடு பழுதடைந்து வருகிறது என்ற போதிலும், மிகவும் அதிகமான மதிப்பு வாய்ந்ததாக இன்றும் உள்ளது.
1992ஆம் ஆண்டு, 96 வயதான Harold Beal உயிரிழந்தனார். 1999ஆம் ஆண்டு, Michael மற்றும் Stacey O'Malley என்னும் இருவர் இவ்வீட்டை வாங்கினர். Harold Bealயின் நகைச்சுவை மற்றும் பேரார்வத்தை நினைவு கூர்வதற்காக, அவர்கள் இவ்வீட்டைச் சுற்றுலாக் காட்சி தலமாகச் சீராமைத்தனர்.