சீனாவும் ஆப்பிரிக்காவும் எப்போதும் ஒரேமாதிரியான குறிக்கோளைக் கொண்டுள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25-ஆம் நாள் தான்சானியாவில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார். இந்தக் கருத்து, ஆழமான மானிடப் பண்பாட்டியல் உணர்ச்சியையும் செழுமையான உள்ளட்டகத்தையும் வெளிப்படுத்துகின்றது. இது, புதிய நிலைமையில், சீன-ஆப்பிரிக்க உறவு வளர்ச்சி பற்றிய சீரிய கருத்தாகும்.
சீனாவும் ஆப்பிரிக்காவும் ஒரே மாதிரியான குறிக்கோளைக் கொண்ட பொது சமூகமாக மாறுவதற்கு காரணம் என்ன?சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும், ஒத்த வரலாற்று அனுபவம் இருக்கிறது. இரு தரப்புகளும் கூட்டு வளர்ச்சி கடமையை எதிர்நோக்கி, கூட்டு உத்தியைப் பயன்படுத்தி நன்மை பெறுகின்றன. முன்பு, சீனாவும் ஆப்பிரிக்காவும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் காலனி ஆட்சியால் பாதிக்கப்பட்டன. குடியரசையும் நாட்டின் சுதந்திரத்தையும் நனவாக்குவதற்கான போராட்டத்தில், இரு தரப்புகளுக்கிடை ஆழமான நட்புறவு உருவாக்கப்பட்டது. இது தான், சீன-ஆப்பிரிக்க உறவின் தனிச்சிறப்பாகும். ஆப்பிரிக்கா, ஷிச்சின்பிங்கின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது, சீனா, ஆப்பிரிக்காவை, நம்பகமான நண்பராகவும் உளமாரக் கூட்டாளியாகவும் கருதும் சாட்சியாகும். இப்போது, ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவது என்ற உன்னத குறிக்கோளுக்காக, சீனா முயல்கின்றது. தொழிற்துறை மயமாக்கம், தொழிற்துறை பன்முக வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கடமைகளை ஆப்பிரிக்கா எதிர்நோக்குகின்றது. வளரும் நாட்டின் நலனைப் பேணிக்காப்பது, நியாயமான அனைத்துலக அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை உருவாக்குவது ஆகிய கோரிக்கைகளை சீனாவும் ஆப்பிரிக்காவும் முன்வைத்துள்ளன. புதிய நிலைமையில், சீன மற்றும் ஆப்பிரிக்காவின் கூட்டு நலன்கள் அதிகரிக்க இது உதவும். இரு தரப்புகளும் கூட்டாக இன்னல்களைச் சமாளிக்கும் போது, கூட்டு வலிமையை நனவாக்க முடியும்.
மூன்று வழிமுறைகளின் மூலம், இரு தரப்புகளின் கூட்டு வலிமையை நனவாக்கலாம். முதலாவது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற வேண்டும். ஷிச்சின்பின் இந்தப் பயணத்தில் உரைநிகழ்த்திய போது, ஆப்பிரிக்காவில் முதலீடு மற்றும் நிதி திரட்டல் ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து விரிவாக்கும் என்று கூறினார். இது, இரு தரப்புகளின் மக்களுக்கு மேலதிக நலன்களைத் தந்து, இரு தரப்புகளின் உறவு வளர்ச்சிக்கு மேலும் பெரும் இயக்கு ஆற்றலை உருவாக்குவது உறுதி. இரண்டாவது, அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக்காப்பதன் மூலம், சீன-ஆப்பிரிக்க உறவு வளர்ச்சிக்கு சீரான சுற்றுச்சூழல் உருவாக்க வேண்டும். மூன்றாவது, அனைத்துலக மற்றும் பிரதேச விவகாரங்களில், ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, எதிர் தரப்புகள் கவனம் செலுத்துகின்ற மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில், உறுதியான ஆதரவு அளிக்க வேண்டும்.