• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு: "ஃபெங் சியாங் களிமண் சிற்பக் கலை"
  2013-03-27 09:55:42  cri எழுத்தின் அளவு:  A A A   

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, "களிமண் சிற்பங்களைத் தயாரிக்கும் குடும்பங்கள்" என்ற பாடலாகும். இது ஃபெங் சியாங்கில் அனைவருக்கும் தெரிந்த பாடலாகும்.

ஃபெங் சியாங் களிமண் சிற்பங்கள், 170க்கு அதிகமான வகைகளைச் சேர்ந்தவை. அவற்றில் மிக பெரிய புலிகள், சிறிய முயல்கள் முதலியவை இருகின்றன. ஃபெங் சியாங் களிமண் சிற்பங்களில், லியு யிங் கிராமவாசிகள் தயாரித்த களிமண் சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. லியு யிங் கிராம களிமண் சிற்பங்களின் மூலப் பொருட்களில், உள்ளூர் பிரதேசத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த கருங்களிமண், ஒட்டும் தன்மையுள்ள ரப்பர் அரிசி மாவ், பஞ்சு முதலியவை இருக்கின்றன. இச்சிற்பங்களில் மிக பெரிய உருவங்களும் அழகான வண்ணங்களும் காணப்படுகின்றன. சீனாவின் அதிகமான நாட்டுப்புற களிமண் சிற்பங்களில் இவை தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஃபெங் சியாங் வண்ண களிமண் சிற்பங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவது வகை, களிமண் விளையாட்டுப் பொம்மையாகும். விலங்குகளின் உருவங்கள் அவற்றில் முக்கியமாக இருக்கின்றன. இரண்டாவது வகை, சுவர்களில் அல்லது கதவுகளில் தொங்க விடப்படும் பொருட்களாகும். இவ்வகை சிற்ப உருவங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுடன் தொடர்புடையவை. மூன்றாவது வகை, மனித உருவங்களாகும். அவற்றில் நாட்டுப்புற செவிவழிக் கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகளில் உள்ள மனிதர் உருவங்கள் அதிகமாகும். இவை அறை அலங்காரத்துக்கும் மத நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040