• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு: "ஃபெங் சியாங் களிமண் சிற்பக் கலை"
  2013-03-27 09:55:42  cri எழுத்தின் அளவு:  A A A   

ஃபெங் சியாங் களிமண் சிற்பப் படைப்புகளில், புலிகளின் உருவங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அப்போதைய களிமண் சிற்பக் கலைஞர்கள், புலியை நேரில் கண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அவர்களது கற்பனையை பயன்படுத்தி, நாட்டுப்புற மக்களின் மனதில் பதிந்திருந்த புலி உருவத்தை உருவாக்கினர். உள்ளூர் பிரதேசத்தின் பழக்க வழக்கங்களின்படி, குழந்தைகள் பிறந்த பின் ஒரு மாதம், நூறு நாட்கள் அல்லது ஓராண்டு பிறந்த நாளைக் கழிக்கும் போது, குழந்தைகளுக்கு இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பொருட்டு, அவர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அமர்ந்திருக்கும் புலியை அன்பளிப்பாக குழந்தைகளுக்கு வழங்குவது வழக்கமாகும்.

ஃபெங் சியாங் களிமண் சிற்பக் கலையின் வரலாறு மிக நீண்டது. ஹான் வம்சம், டாங் வம்சம், சோ வம்சம் மற்றும் சிங் வம்ச காலத்தில் இது தோன்றியது. ஷான் சி மாநிலத்தின் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், லியு யிங் கிராமத்தின் களிமண் சிற்பக் கலைஞருமான ஹூ சின் மின் கூறியதாவது:

"ஃபெங் சியாங் களிமண் சிற்பக்கலை பண்பாட்டில், ஹான் மற்றும் டாங் வம்சங்களின் களிமண் சிற்பத் தனிச்சிறப்புக்கள் காணப்படுகின்றன. கம்பீரமான, வீரஞ்செறிந்த தனிச்சிறப்புக்கள் இதிலுள்ளன. தவிர, பண்பாட்டின் அடிப்படையில் தோன்றிய ஃபெங் சியாங் களிமண் சிற்பங்களில், சோ மற்றும் சிங் வம்சப் பண்பாட்டின் தனிச்சிறப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்று தொல்லியல் அறிஞர்களும் நாட்டுப்புறவியலாளர்களும் கருதுகின்றனர். இந்த களிமண் சிற்பங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் அதிகம். இதில், மரபை அடையாளப்படுத்தும் பண்பாட்டின் தனிச்சிறப்புக்கள் காணப்படுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040