ஃபெங் சியாங்கின் லியு யிங் கிராமத்தில், பல்வேறு குடும்பங்களின் தோட்டங்களிலிருந்து களிமண் சிற்பங்களைத் தயாரிக்கும் ஒலி கேட்கிறது. இந்த ஒலி லியு யிங் கிராமத்தில் சில ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இக்கிராமத்தின் களிமண் சிற்பக் கலைஞர் ஹூ சின் மின் கூறியதாவது:
"ஃபெங் சியாங் களிமண் சிற்பங்களைத் தயாரிக்கும் செய்முறைகள், சீனாவில் உள்ள பாரம்பரிய களிமண் கைவினை சிற்பக் கலையில் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். களிமண்ணை தெரிவு செய்வது முதல், அதனை சிற்பமாக தயாரிக்கும் வரையில் 32 செய்முறைகள் இருக்கின்றன" என்றார் அவர்.