• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு: "ஃபெங் சியாங் களிமண் சிற்பக் கலை"
  2013-03-27 09:55:42  cri எழுத்தின் அளவு:  A A A   

"சீன நண்பர் ஒருவர் எனக்கு இக்களிமண் சிற்பத்தை அன்பளிப்பாக வழங்கினார். இது தலைசிறந்தது. பாம்பு உருவம் கொண்டுள்ள இக்கைவினைப் பொருளை மிகவும் நேசிக்கிறேன்" என்றார் வெளிநாட்டு அம்மையார் ஒருவர்.

கடந்த சில ஆண்டுகளில், ஃபெங் சியாங் களிமண் சிற்பங்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. எனவே இச்சிற்பங்கள் அதிகமாக விற்கப்பட்டு, வினியோகத்தை விட தேவை அதிகமாகும் நிலை தோன்றியது. லியு யிங் கிராமத்தில் களிமண் சிற்பங்களைத் தயாரிப்போரின் எண்ணிக்கை 7 முதல் 8 குடும்பங்கள் என்பதிலிருந்து தற்போதைய 300க்கு அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1200 பேர் வரை விரைவாக அதிகரித்துள்ளது. களிமண் சிற்பத் தயாரிப்பால் இக்கிராமம் பெறும் ஆண்டு வருமானம், முந்தைய 16 ஆயிரம் யுவானிலிருந்து தற்போதைய ஒரு கோடி யுவான் வரை அதிகரித்துள்ளது. களிமண் சிற்பத் தயாரிப்பு, லியு யங் கிராமவாசிகளுக்கு சிறந்த பொருளாதார பயன்களைத் தரும் அதே வேளையில், இந்த நாட்டுப்புறக் கலையின் கையேற்றல் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. 17 வயதான பெய் ச்சு லியான், பேராசிரியர் ஹூ சின் மின்னிடமிருந்து களிமண் சிற்பக் கலையைக் கற்றுக் கொள்ள துவங்கி, 5 திங்கள் ஆகி விட்டன. அவர் கூறியதாவது:

"களிமண் சிற்பக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. என் ஆசிரியர் எனக்கு நேரடியாகவும் உணர்வுபூர்வமாகவும் கற்றுக்கொடுக்கிறார். சில சமயங்களில் ஒரு சிற்பத்தின் பாதியை அவர் தயாரிப்பார். அச்சிற்பத்தின் இன்னொரு பாதியை நான் தயாரிப்பேன்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040