• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நோவார்டிஸ் தொடுத்த வழக்கு—இந்தியா நிராகரிப்பு
  2013-04-03 16:37:25  cri எழுத்தின் அளவு:  A A A   
மருந்து கண்டுபிடிப்பு காப்புரிமை குறித்து சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ் நிறுவனம் தொடுத்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் முதல் நாள் நிராகரித்தது. புற்றுநோய்க்கான மருந்தின் கண்டுபிடிப்பு காப்புரிமை பெற இந்திய அரசுக்கு நோவார்டிஸ் நிறுவனம் முன்வைத்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக காப்புரிமை சட்ட விதிகளைத் திருத்த அந்நிறுவனம் இந்திய அரசு மீது வழக்கு தாக்கல் செய்தது. இந்த மருந்து, புத்தாக்கம், தனிப் படைப்பு ஆகிய 2 வரையறைகளுக்கு ஏற்றதல்ல என்பதால், இந்திய கண்டுபிடிப்பு காப்புரிமை ஆணையத்தின் முடிவுக்கு ஆதரவளிப்பதை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

நோவார்டிஸ் நிறுவனத்தின் மருந்தை போல தயாரிக்கப்பட்ட பிற மருந்துகளை நோயாளிகள் வாங்கி உட்கொண்டு சிகிச்சை பெறுவதற்கு, இந்திய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணைபுரியும். நோவார்டிஸ் நிறுவனம் தயாரித்த இந்த மருந்தை பயன்படுத்தும் 3 இலட்சம் நோயாளிகளுக்கு இந்தத் தீர்ப்பு நற்செய்திதான் என்று த இந்து ஆங்கில நாளேடு 2ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியது.

மேலும், இந்தியா தயாரிக்கும் மருந்துகளைப் பாதுகாப்பதற்கு இந்தத் தீர்ப்பு துணைபுரியும் என்று இந்திய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040