• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:நிங் சியாவில் ஹுவார் பாடற்கலையின் பரவல் மற்றும் வளர்ச்சி
  2013-04-09 09:41:09  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்றைய நிகழ்ச்சியில், "நிங் சியாவில் ஹுவார் பாடற்கலையின் பரவல் மற்றும் வளர்ச்சி" பற்றிக் கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழந்பன்.

"ஹுவார்" என்ற பாடற்கலை, சீனாவின் நிங் சியா குவெய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பரந்துபட்ட அளவில் பரவி இருக்கும் நாட்டுப்புற பாடல்களில் ஒன்றாகும். கடந்த சில நூறு ஆண்டுகளில், ஆர்ப்பொலியுடைய அல்லது இனிமையான ஹுவார் இன்னிசை உள்ளூர் மக்களிடையே வாய்வழி மூலம் தலைமுறை தலைமுறையாக பரவி வருகிறது. அருமையான வாழ்க்கை மற்றும் நேர்மையான காதல் மீதான பல்வேறு தேசிய இன மக்களின் ஆசையையும், எதிர்பார்ப்பையும் ஹுவார் பாடற்கலை வெளிப்படுத்துகிறது. நிங் சியா பிரதேசத்திலுள்ள ஹுவார் பாடகர்களைப் பொறுத்தவரை, ஹுவார் பாடல் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் மிக நல்ல வடிவமாகும்.

75 வயதான லியு சியு ஃபெங் நிங் சியா பிரதேசத்தின் புகழ்பெற்ற ஹுவார் பாடகர் ஆவார். அவர் நிங் சியா பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசும் ஆவார். 70க்கு அதிகமான வயதான முதியவராகிய அவர் இன்னும் உரத்தக் குரலுடனும், உயிராற்றலுடனும் ஹுவார் பாடுகிறார். பல்வகை நாட்டுப்புற பாடல் போட்டிகளிலும், அரங்கேற்றங்களிலும் அவர் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040