லியு சியு பெங் பாரம்பரிய பாட்டுப் பாணியை நேசிக்கிறார். ஆனால் அவரது மகன்களும் பேரன்களும், அவர் வாழும் கிராம இளைஞர்களும் பாப் இசையை விரும்புகின்றனர். இந்த இடைவெளியை லியு சியு ஃபெங்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாரம்பரிய ஹுவார் பாடக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை மென்மேலும் குறைந்து வருவதை கண்டு, லியு சியு ஃபெங்க்கு கவலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் அவர் பாடும் ஹுவார் பாடல்களை எதிர்கால தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க அவர் விருப்பம் தெரிவித்தார்.