லியு பெங் மலைப் பிரதேசத்தில், உள்ளூர் மக்கள் ஹுவார் பாட விரும்புகின்றனர். அங்குள்ள குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களிலும் ஹுவார் போட்டிகள் அடிக்கடி நடைபெறுகின்றன. லியு சியு ஃபெங் இப்போட்டிகளில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, பல போட்டிகளில் முதல் விருது வென்றார். 8வது சீன மேற்குப் பகுதி நாட்டுப்புறப் பாடல் போட்டியில், அவர் சிறப்பு விருது பெற்றார். ஆனால் லியு சியு ஃபெங் இந்த விருதுகளில் கவனம் செலுத்தவில்லை. ஹுவார் பாடுவதை மக்கள் விரும்பி கேட்பதே, எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று லியு சியு ஃபெங் தெரிவித்தார். ஹுவார் பாடுவதன் மூலம், அருமையான காலத்தை அவர் நினைவு கூர்க்கின்றார். அவர் கூறியதாவது:
"மக்கள் ஹுவார் பாடும்போது, அவர்களுக்கு பல்வகை உணர்வுகள் ஏற்படுகின்றன. கவலையிலிருந்து விடுபடலாம். தொல்லைகள் ஏற்படும் போதும், மகிழ்ச்சி ஏற்படும் போதும் ஹுவார் பாடுகிறோம்" என்றார் அவர்.
தற்போது, ஹுவார் பாடும் பாணிகள் அதிகரித்து வந்துள்ளன. வட மேற்கு சீனாவின் பல்வேறு இடங்களில் பரவி வரும் பாரம்பரிய பாட்டுப் பாணியைத் தவிர, நவீன இசை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள புத்தாக்கப் பாட்டுப் பாணிகளும் உருவாகி உள்ளன.