லியு சியு ஃபெங் செய்தியாளரிடம் பேசுகையில், சுமார் 500 ஹுவார் பாடல்களை சேகரித்துள்ளதாகவும், பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அரங்கேற்றங்களில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலதிக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பழமை வாய்ந்த ஹுவார் கலையை நேசித்து, ஹுவார் கற்றுக்கொண்டு, ஹுவார் பாடல் பாடி, பரப்புரை செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"இளைஞர்கள் என்னிடமிருந்து ஹுவார் பாடற்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது வாழ்நாளில் ஹுவார் பரவல் செய்வதே எனது ஒரே ஒரு விருப்பமாகும்" என்றார் அவர்.
நேயர்களே, "நிங் சியாவில் ஹுவார் பாடற்கலையின் பரவல் மற்றும் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.