• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பழமைவாய்ந்த டன்கர் தோல் பூத்தையல் கலை
  2013-04-16 09:49:42  cri எழுத்தின் அளவு:  A A A   

மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தில், டன்கர் தோல் பூத்தையல் பக்குவமடைந்து வளர்ந்தது. தோல் பூத்தையல் பொருட்களின் தத்ரூபமான உருவங்களில், இயற்கைக் காட்சிகள், மலர்கள், பறவைகள் முதலியவை இடம்பெற்றன. தோல் பூத்தையல் பொருட்களின் வகைகளில், ஆடைகள், அலங்காரப் பொருட்கள், அன்றாட வாழ்க்கை பொருட்கள் முதலியவை அடங்குகின்றன. வண்ணமயமான பட்டு இழை, ஆட்டின் மயிர், குதிரை வால் உள்ளிட்ட பொருட்கள் பூத்தையலில் பயன்படுத்தப்படுகின்றன. பூத்தையல் வழிமுறையில், சீனாவின் தென் மற்றும் வட பகுதிகளின் பூத்தையல் தனிச்சிறப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன. பூத்தையல் வேலை செய்முறை மிகவும் சிக்கலாக இருக்கிறது.

டன்கர் தோல் பூத்தையல் காட்சி அறையில் நுழைந்தால், வரலாற்றிற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. இளவரசி வன் செங், Ri Yue மலையடிவாரம், புல்வெளியில் உள்ள புதிய நகர் என்ற தோல் பூத்தையல் படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க காட்சிகள் அப்படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040