சீனத் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அழைப்பின் பேரில், நேபாள மற்றும் இந்தியச் செய்தியாளர் குழு 3ஆம் நாள் முதல் சீனாவில் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியது. அன்று, அவர்கள் சீன வானொலி நிலையத்துக்கு வந்து தமிழ் பிரிவு, ஹிந்திப் பிரிவு, நேபாளப் பிரவு ஆகியவற்றைச் சேர்ந்த செய்தியாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினர். இந்தப் பயணத்தின் மூலம், சீன-தெற்காசிய செய்தி ஊடகங்களுக்குமிடையே தொடர்பையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தி, தெற்காசிய மக்கள் வளர்ந்து வரும் உண்மையான சீனாவை மேலும் புரிந்து கொள்வதற்குத் துணை புரிய வேண்டும் என்று இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா மற்றும் சி்க்காச்செ பிரதேசத்திலும் இந்தப் பிரதிநிதிக் குழு பயணம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.