• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்
  2013-05-07 08:48:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் வாழ்கின்ற லீ இனம், சீனாவின் மிக பழமை வாய்ந்த தேசிய இனங்களில் ஒன்றாகும். லீ இனத்தவர், நீண்டக்கால வளர்ச்சிப் போக்கில், தனிச்சிறப்பு வாய்ந்த சிறந்த பண்பாடுகளை உருவாக்கினர். சிறப்பு மிக்க இயற்கை மற்றும் நிலவியல் சூழல், சமூக மற்றும் வரலாற்று நிலைமை ஆகியவற்றின் காரணமாக, பண்டைக்காலத்தில் உருவாகியப் பண்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்துள்ளன. இக்காலத்திலும், மக்களின் வாழ்க்கையில் இப்பண்பாடுகளை இன்னும் காணலாம்.

இருந்தபோதிலும், லீ இனச் சமூகத்தின் விரைவான வளர்ச்சி, வெளியுலகத்துடன் ஒன்றிணைவது அதிகரிப்பு ஆகியவற்றுடன், நீண்டக்கால வரலாறு உடைய அதிக பொருள் சாராப் பண்பாடுகள், அதிர்ச்சி தரும் வேகத்தில் மறைந்து வருகின்றன. லீ இன துணிப் பின்னல் நுட்பம், சீன நெசவு வரலாற்றிலுள்ள வாழும் தொல்லுயிர் என அழைக்கப்படுகிறது. கடந்த காலத்தில், லீ இனம் வாழும் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், லீ இன மகளிர் பின்னும் குட்டைப் பாவடை, ஆடை, தொப்பி, இடுப்புப் பட்டி உள்ளிட்ட தலைசிறந்த நெசவு கலைப் பொருட்களை காணலாம். வண்ணமயமான உருவங்களும், அழகான வடிவமைப்பும், தனிச்சிறப்பு வாய்ந்த பாணியைக் காட்சிக்கு வைக்கின்றன. லீ இனத் துணி, லீ இன மகளிரின் விவேகத்தையும், அவர்கள் தாவர சாயப் பொருட்களைப் பயன்படுத்தும் தலைசிறந்த தொழில் திறனையும் வெளிப்படுத்துகிறது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040