• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்
  2013-05-07 08:48:52  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனம் பயன்படுத்தும் தாவர சாயப் பொருட்கள், பெரும்பாலும் மூலிகை மருந்துகளாகும். இப்பொருட்கள், மக்களின் உடல் நலத்துக்கு தனிச்சிறப்பு மிக்க பங்காற்றி வருகின்றன. இச்சாயப் பொருட்களில் மக்களின் உடல் நலத்துக்கு பாதகமான பகுதிகளை அகற்றிவிட்டு, சாதகமானவற்றை பயன்தரும் முறையில் பிரித்து எடுத்து பயன்படுத்தினால், மக்களின் உடல் நலத்துக்கு பங்காற்றும். எடுத்துக்காட்டாக, நீல சாயம் கொடுக்கும் அவுரிச்செடியின் இலை, காய்ச்சலைத் தணித்து, நச்சை அழிக்கும் மருந்தாக இருக்கிறது. நீல மஞ்சள் சாயம் வழங்கும் மஞ்சள் செடியின் வேர், நடுத்தண்டு, இரத்த ஓட்டத்தடையை நீக்கி, வலியை நிறுத்த பங்காற்றுகிறது.

லீ இனம் உற்பத்தி செய்யும் பருத்தி, சணல் உள்ளிட்ட நெசவுப் பொருட்களின் நார், மக்களின் உடல் நலத்துக்கு துணைபுரிகின்றன. வண்ணச்சாயத்தின் மேம்பாட்டையும், நார் மேம்பாட்டையும் இணைப்பது, இம்மக்களுக்கு நன்மை தரும். இக்காலத்தில் இயற்கையை மதித்து, இயற்கையுடன் இணக்கமாக பழகுவது, தனித்தன்மையை ஆவலுடன் விரும்புவது ஆகிய மக்களின் மன தேவைகளை இது முழுமையாக நிறைவு செய்ய முடியும். இது பயன்தரும் முறையில் வளர்க்கப்பட்டால், லீ இன நெசவுப் பொருட்களின் மதிப்பு பெரிதும் உயரும். இதற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

நேயர்களே, "லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040