• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்
  2013-05-07 08:48:52  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனத்தவர், வெப்ப மண்டலக் காட்டு பகுதியில் வாழ்கின்றனர். அங்குள்ள தாவர சாயப் பொருட்கள் அதிகம். அதனால் லீ இன மகளிர் பயன்படுத்தும் தாவர சாயப் பொருட்கள் வெவ்வேறான வகைகளைச் சேர்ந்தவை. தவிர, லீ இனம் வாழும் வெவ்வேறான பகுதிகளில், மக்களின் விருப்பம் மற்றும் பழக்க வழக்கத்தின் வேறுபாட்டிற்கிணங்க, பயன்படுத்தப்படும் சாயப் பொருட்களின் வகைகள் வேறுபட்டவை. தற்போது, லீ இனம் அடிக்கடி பயன்படுத்தும் தாவரச் சாயப் பொருள் வகைகள், பத்துக்கு அதிகமாகும்.

லீ இனத்தவர், கடும் வண்ணங்களை கொண்ட ஆடைகளை அணிய விரும்புகின்றனர். இவ்வினத்தின் பாரம்பரிய ஆடைகளில், கருநீல வண்ண ஆடைகள், அதிகமானவை. அவுரிச்செடி, லீ இனம் அடிக்கடி பயன்படுத்தும் சாயப் பொருளாகும். அவுரிச்செடி சாயம், அவுரிச்செடியிலிருந்து கிடைக்கும் தாவர சாயப் பொருட்களைப் பயன்படுத்தி, நூல் அல்லது துணியில் வண்ணம் சேர்க்கும் வழிமுறையாகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040