சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் வளர்ச்சி விரைவாக இருக்கிறது. தற்போது தெற்காசிய நாடுகளின் முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாகவும், முதலீடு செய்யும் நாடாகவும் சீனா மாறியுள்ளது. அதே வேளையில் சீனாவின் முக்கிய அன்னிய ஒப்பந்த முறை வணிக நாடுகளாகவும், முதலீட்டு இலக்கு நாடாகவும் தெற்காசிய நாடுகள் மாறியுள்ளன என்று சீன வணிக துணை அமைச்சர் லீ சின் சாவ் 7ஆம் நாள் நடைபெற்ற சீன-தெற்காசிய பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
2000ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கும் தெற்காசியாவுக்குமிடையிலான வர்த்தகத் தொகை 9 ஆயிரத்து மூன்னூறு கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. சராசரியாக இது ஆண்டுக்கு 26 விழுக்காட்டுக்கும் மேலாகும்.