• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி
  2013-05-08 11:34:17  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி இவ்வாண்டின் ஜுன் 6-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன்மிங்கில் நடைபெறும்.

இப்பொருட்காட்சி இதற்கு முன்னால், 5 முறைகள் தெற்காசிய சர்வதேச வணிகப் பொருட்காட்சியாக நடைபெற்றிருக்கிறது. கடந்த அக்டோபர் திங்கள், சீன அரசவையின் அங்கீகாரத்துடன், இவ்வணிகப் பொருட்காட்சி, சீன-தெற்காசிய பொருட்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல், இப்பொருட்காட்சி சீனாவின் குன்மிங் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும். சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முக்கிய இணைப்பாகவும், சீனாவும் தெற்காசிய நாடுகளும் இதர நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் வர்த்தக பரிமாற்றம் மேற்கொள்ளும் முக்கிய மேடையாகவும் சீன-தெற்காசிய பொருட்காட்சி மாறும் என்று யுன்னான் மாநிலத்தின் துணைத் தலைவர் கெள ஷு சுன் தெரிவித்தார்.

சீனா, தெற்காசிய நாடுகளுக்கு மேலும் சந்தையைத் திறப்பதற்கு வழிவகுக்க, புதிய மேடையை ஏற்படுத்துவது என்பது, தற்போது இப்பெருட்காட்சியை நடத்தும் முக்கிய காரணமாகும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் லீ சின் செளவ் தெரிவித்தார்.

முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியில், கண்காட்சி, வணிகப் பொருட்கள் கொள்வனவு முதலிய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தெற்காசிய நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளுக்கான காட்சி அரங்குகளை உருவாக்குவதன் மூலம், பல்வேறு நாடுகளின் மேம்பாடுகளையும் தனிச்சிறப்புகளையும் இணைத்து, சுற்றுலா, பண்பாடு, சேவை வர்த்தகம் முதலிய துறைகள் பற்றிய அம்சங்கள் இப்பொருட்காட்சியில் அதிகரிக்கப்படும். அத்துடன், இப்பொருட்காட்சியில் கலந்துக் கொள்ளும் வணிக தொழில்நிறுவனங்களுக்கு மேலதிக வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் வகையில், தேவைக்கு இணங்க, பல்வேறு நாடுகளின் வணிகத் தொழில் நிறுவனங்கள், சீனாவின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கொள்வனவு நிறுவனங்களுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, வர்த்தக உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதை இப்பொருட்காட்சி ஏற்பாடு செய்யும்.

இப்பொழுது, தெற்காசிய நாடுகளின் முக்கிய வர்த்தகக் கூட்டாளி மற்றும் அன்னிய முதலீட்டு நாடாக, சீனா மாறியுள்ளது. அத்துடன், தெற்காசிய நாடுகள், சீனாவின் முக்கிய வெளிநாட்டுத் திட்டப்பணிகளுக்குப் பொறுப்பேனற்று முதலீடு செய்யும் நாடுகளாக உள்ளன.

எதிர்காலத்தில், சீன-தெற்காசிய வர்த்தக உறவில், மிக அதிக வாய்ப்புகள் காணப்படும். இனி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா முதலிய துறைகளில், இரு தரப்புகளும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவை ஆழமாக்கும் என்று சீனத் துணை வணிக அமைச்சர் லீ சின் செளவ் கூறினார்.

தவிரவும், சீன-தெற்காசிய பொருட்காட்சி நடைபெறும் போது, வணிகம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துக்கான பல கருத்தரங்குகளை நடத்துவதன் மூலம், சீனாவும் தெற்காசிய நாடுகளும் ஒத்துழைப்பு மேற்கொண்ட போது சந்தித்த அனைத்து இன்னல்களும் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040