• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-தெற்காசிய நாடுகளின் சிந்தனை கிடங்கு கருத்தரங்கு
  2013-05-10 18:49:34  cri எழுத்தின் அளவு:  A A A   
"சீன-தெற்காசிய நாடுகளின் சிந்தனை கிடங்கு கருத்தரங்கு" ஜூன் 6, 7 ஆகிய நாட்களில் சீன யுன்னான் மாநிலத்தின் குன் மிங் நகரில் நடைபெறும். இது வரை, இக்கருத்தரங்கில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ளவுள்ளதாக தெற்காசிய நாடுகளின் கல்வியியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீனாவுக்கும், தெற்காசிய நாடுகளுக்குமிடை தகவல் தொடர்பு மேடையை உருவாக்குவதும், இரு தரப்புகளுக்கிடை நட்பார்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்த ஆதரவளிப்பதும், இக்கருத்தரங்கை நடத்துவதன் நோக்கமாகும்.

சீனாவின் புகழ் பெற்ற தெற்காசியப் பிரச்சினை நிபுணரும், யுன்னான் மாநிலத்தின் சமூக அறிவியல் ஆய்வகத்தின் தலைவருமான ரென் சியா 9ம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். நடப்புக் கருத்தரங்கு மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றம் மூலம் பல்வேறு நாட்டு மக்களுக்கிடை புரிந்துணர்வை விரைவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார். பொருளாதாரம், வர்த்தகம், அரசியல் ஆகிய துறைகளில் சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடை பரிமாற்றம் நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், மானிட பண்பாட்டுப் பரிமாற்றம், சீன-தெற்காசிய ஒத்துழைப்பில் புதியத் தனிச்சிறப்பாக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது, சீன-தெற்காசிய பொருளாதார வர்த்தக உறவு வளர்ந்து வருகிறது. ஆனால் மானிடப் பண்பாட்டுத் துறையில் இரு தரப்புகளுக்கிடை பரிமாற்றம் அதிகமாக இல்லை. அதனால் கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சில அண்டை நாடுகள், சீனா பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் தெற்காசிய நாடுகள் பற்றிய சீன மக்களின் புரிந்துணர்வு குறைவாக இருக்கிறது என்று ரென் சியா சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா, கல்வி உள்ளிட்ட மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றம், பொது மக்களிடையே எளிதில் செல்வாக்கை ஏற்படுத்துகிறது. குன்மின் நகரில் நடைபெறும் சீன-தெற்காசிய சிந்தனை கிடங்கு கருத்தரங்கு ஒரு நல்ல மானிடப் பண்பாட்டுப் பரிமாற்ற வாய்ப்பாகும் என்று ரென் சியா தெரிவித்தார். சீனா, தெற்காசியா, தென் கிழக்காசியா, இதர நாடுகள் ஆகியவற்றுக்குக் சிந்தனை கிடங்களுக்கிடை பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு வலைப்பின்னை உருவாக்கி, பொருளாதாரம், பண்பாடு, சமூகம் உள்ளிட்ட துறைகளில் அவற்றுக்கிடை ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கு நடைபெறும் போது, சீனா, இந்தியா, பாகிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் ஆய்வு நிறுவனங்களும், நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, பிரதேச ஒத்துழைப்பு மற்றும் மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றி விவாதிப்பர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040