9வது பெய்ஜிங் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சி 18ஆம் நாள் சனிக்கிழமை துவங்கியது. நடப்புக் கண்காட்சியில் 94 சீனப் பூங்காப் பகுதிகளும், 34 வெளிநாட்டுப் பூங்காப் பகுதிகளும் உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கண்காட்சி சீனாவில் மிக உயர தரமான பன்னாட்டுத் தோட்டக் கலை கண்காட்சியாகும்.
29 நாடுகளின் 37 நகரங்களும் நிறுவனங்களும் நடப்புக் கண்காட்சியில் மொத்தம் 34 பூங்காப் பகுதிகளைக் கட்டியமைந்தன. பண்பாடு துறையில் பல்வேறு நாடுகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் இது சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இக்கண்காட்சி மூலம் மேலும் அதிகமான சீன மக்கள் வட கொரியப் பண்பாடு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று வட கொரிய மலர் சங்கத்தின் வெளிநாட்டுப் பணிப் பிரிவின் தலைவர் ஹோ சின்காவ் தெரிவித்தார். அவர் கூறியதாவது
நகரங்களில் பசுமை மற்றும் அழகான வீடுகளைக் கட்டியமைப்பது நடப்புக் கண்காட்சியின் குறிக்கோளாகும். வட கொரியாவின் கிம் இல் செங் பூ, கிம் சேன் இல் பூ ஆகியவற்றை நாம் கொண்டு வந்தோம். பார்வையாளர்களுக்கும் பன்னாட்டு நண்பர்களுக்கும் வட கொரியாவில் புகழ்பெற்ற மலர்களையும் பொருட்களையும் அறிமுகப்படுத்த விரும்புகின்றோம் என்றார் அவர்.
முதல் நாளில் சுமார் 50 ஆயிரம் பார்வையாளர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர் என்று மதிப்பிடப்பட்டது. அவர்களில் வெளிநாட்டுப் பயணிகள் அதிகம். இந்தியாவிலிருந்து வந்த ரோஜெ கூறியதாவது
பல காட்சிப் பகுதிகளைப் பார்வையிட்டுள்ளேன். நடப்பு கண்காட்சி ஒரு மாபெரும் கண்காட்சியாகும். பெய்ஜிங் அரசு இதில் அதிக கவனம் செலுத்துகின்றது. பெய்ஜிங்கை ஒரு பசுமையான நகரமாக கட்டியமைக்கும் அதன் மனவுறுதியை இது சிறப்பாக வெளிப்படுத்தியது.
இந்தியப் பூங்காப் பகுதி பற்றி அவர் மேலும் கூறியதாவது
இந்தியப் பூங்காவை மிகவும் விரும்புகின்றேன். தாஜ் மஹாலை அடிப்படையாக இது வடிவமைக்கப்பட்டது. பாரம்பரிய இந்திய கட்டிடக் கலையையும், இந்திய உணவு வகைகளையும் கைவினைப் பொருட்களையும் இப்பகுதியில் கண்டுகளிக்கலாம் என்று அவர் கூறினார்.
உயிரின வாழ்க்கை கட்டுமானத்தை சீன அரசு எப்போதும் ஆதரிக்கின்றது. கரி குறைந்த வாழ்க்கை வடிவத்தை உருவாக்கி, அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டத்தை ஆழமாக்குவது நடப்புக் கண்காட்சியின் இலக்காகும் என்று பெய்ஜிங் மாநகரின் தலைவர் வாங் ஆன்சுன் தெரிவித்தார்.