பண்டைகால சீனாவின் நினைவு சின்னமாக மிகவும் கம்பீரத்துடன் காண்போரது மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குகிறது இந்த (மறுக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட நகரம்) அரண்மனை. ஷி சின் செங் என்று சீன மொழியில் அழைக்கபடுகிறது இந்த நகரம்.
அரச குடும்பங்கள் வாழ்ந்த நகரமானதால் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தடைசெய்யப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. இந்த அரண்மனையில்மிங், சிங் அரசகுலத்தவர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதன் உள் அரண்மனை கண்காட்சியகம் உள்ளது. அரச குடும்பத்து சடங்குகள், அரசியல் சம்பந்தப்பட்ட கூட்டங்கள் அரச குலத்தின் குடும்ப விழாக்கள், நிகழ்வுகள் எல்லாம் இந்த நகரத்தில் கொண்டாடப்பட்டது.