உலகத்தின் மிகப்பெரிய அரண்மனை வளாகம். கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் வந்து பார்க்கும் ஒரு பிரம்மாண்ட மாளிகை. பெய்ஜிங்கின் நடுநாயகமாக விளங்கும் இந்த அரண்மனை, சீன பண்பாட்டை விளக்கும் ஒரு மரபுசின்னமாகும். 1987 ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்டது யுனெஸ்கோவும் உலகின் பாதுகாக்கபட்ட பண்டைய கட்டிடங்களின்.ஒரு சிறந்த கட்டிட மரபுசின்னமாக அறிவித்திருக்கிறது. ஒரு மில்லியன் (10 லட்சம்) தொழிலாளர்கள் இந்த அரண்மனை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.