மன்னர் அவரது குடும்பத்திர்கான அரண்மனைகள், அலுவலகங்கள், நீதிதுறை, மருத்துவமனைகள், இராணுவ கிடங்குகள், கருவூலம், வழிபாட்டு தலங்கள், அனைத்தையும் உள்ளடக்கி இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. மாளிகையின் மைய மண்டபம் பேரரசர் இராஜ்ஜிய பரிபாலனை செய்யும் இடமாகும். மாளிகையின் உச்சி பகுதி பொன்னிற ஓடுகளை கொண்டு அலங்கரிக்கபட்டிருக்கிறது. மஞ்சள் நிறம் ஆட்சியின் சின்னமாகவும் கருதப்பட்டது. புத்தக சாலையின் கூரை கருப்பு நிற ஓடுகளால் வேயப்பட்டிருக்கிறது. கருப்பு நிறம் நீருடன் தொடர்புடைய நிறம். தீயை தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இளவரசரின் கூரை பச்சை நிற ஓடுகளினால் அலங்கரித்திருந்தார்கள். பச்சை நிறம் மரம், செடிகளுடன் தொடர்புடையது. மரம் போல இளவரசர் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியுள்ளனர். கண்ணை பறிக்கும் ஓவியங்கள், அழகான சிற்பங்கள், பளிங்கு கற்களாலான தரை, அலங்கார தூண்கள், மாளிகையை அலங்கரிக்கின்றன.