பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கடிகாரங்கள், செம்பு சாமான்கள், சீன பேரரசர்களுக்கு மிகவும் பிடித்தமான் ஜேடினால் செய்யப்பட்ட பொருள்கள் காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இந்த பர்பிடன் சிட்டியில் தான் லாஸ்ட் எம்பரர் என்ற படம் எடுத்திருக்கிறார்கள். ஏராளமான புதையல்களையும், ரகசியங்ளையும் தன்னகத்தே கொண்ட இந்த மாளிகை சீனா குடியரசு பெற்ற பின் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.