• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தடை செய்யப்பட்ட நகரம்
  2013-06-03 16:03:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன காடுகளில் காணப்படும் ஹன்மூ என்ற விலைமதிப்பற்ற மரங்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. முக்கிய அறைகள் தரை தளங்கள் தங்க செங்கல்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகை சிங் வம்ச பேரரசர்களின் இறுதி வரை சீன பேரரசர்களின் அரண்மனையாக இருந்து வந்தது 24 சீன பேரரசர்கள்.,அவர்களின் குடும்பங்கள் சுமார் 500 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். சிங் வம்ச காலத்தில் இது அரசு வேலைகளை கவனிக்கும் மாளிகையாகவும் இருந்துள்ளது.. அரண்மனை சுற்று சுவர் சிவப்பு நிற சுவரால் அமைக்கபட்டுள்ளது. சுவற்றின் நீளம் 3400 மீட்டரும், அன்னியர் யாரும் நுழையாமல் இருக்க மதில் சுவர்களும், ஆறு மீட்டர் நீளமுள்ள அகழியும் கட்டப்பட்டுள்ளது. சுமார் 178 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மாளிகையில் 900 கட்டிடங்களும், 9999 அறைகளும், 90 அரண்மனைகளும் உள்ளது. இந்த கட்டிடம் சீன சிற்பகலையின் நுணுக்கத்துடன் யாவரும் வியக்கும் வண்ணம் கட்டியுள்ளனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040