அரண்மனையின் முன்பகுதி அலுவலகங்கள், அரசு விழா நடைபெறும் கட்டிட பகுதியாகவும், மாளிகையின் பின்பகுதி பேரரசர், பேரரசிகளுக்கென்ற தனிதளமும்,, அரசரின் ஆசை நாயகிகளுக்கென்று தனிதனி கட்டிடங்களும் பணிபெண்கள், பணியாளர்கள் வாழும் கட்டிடங்களும் பூங்கா, நூலகங்களையும் கொண்ட கட்டிடங்களையும் உள் அடக்கியதாக இருக்கிறது. அரண்மனையின் கண்காட்சியில் விதவிதமான பீங்கானாலும், மண்ணாலும் செய்யப்பட்ட ஜாடிகள், குடுவைகள் என்று ஏராளமான பொருள்கள் சாங், தாங் மன்னர்கள் காலத்தில் சேகரிக்கப்பட்டு சில இங்கும், சில நாஞ்சிங்கிலும், சில தாய்பெய் அரண்மனை கண்காட்சியிலும் வைக்கப்பட்டுள்ளது.