8 தெற்காசிய நாடுகளைத் தவிர, 31 நாடுகள் மற்றும் ஹாங்காங், மக்கௌ, தைவான் பிரதேசங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் 663 பொருட்காட்சி அரங்குகள் இதில் இருக்கின்றன. கலந்து கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 1200யைத் தாண்டும். அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தொழில்நிறுவனம் மற்றும் இந்திய டாடா குழுமம் உள்ளிட்ட உலகின் 500 முன்னணி தொழில்நிறுவனங்களும், வேறு புகழ் பெற்ற தொழில்நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும்.
மேலும், சீன-தெற்காசிய வர்த்தகக் கருத்தரங்கு, சீன-தெற்காசிய நட்புக் கருத்தரங்கு, சீன-தெற்காசிய சிந்தனை கிடங்குக் கருத்தரங்கு முதலிய 18 முக்கிய நிகழ்ச்சிகளும் அங்கே நடைபெறும்.