இலங்கைத் தலைமை அமைச்சர் டி.எம்.ஜெயரத்னவின் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிக் குழு, 6ஆம் நாள் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் கலந்து கொண்டது. இலங்கை மற்றும் சீனாவுக்குமிடை பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பில் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. தெற்காசிய மற்றும் பல்வேறு ஆசியான் நாடுகளுக்குக்குமிடையே பரிமாற்ற மேடையை இந்தப் பொருட்காட்சி வழங்கியுள்ளது. மேலும், இலங்கை இப்பொருட்காட்சியில் மாபெரும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களைப் பெற்று வருகிறது என்று ஜெயரத்ன சீன வானொலி நிலையச் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.