முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் கலந்து கொண்ட இலங்கை தலைமை அமைச்சர் டி.எம்.ஜெயரத்ன தலைமையிலான பிரதிநிதிக் குழுவை, சீனாவின் யுன்னான் மாநிலத் தலைவர் லீ ஜிஹெங் ஜூன் 8ஆம் நாள் சந்தித்துப் பேசினார்.
சுற்றுலா, கல்வி, பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை இரு தரப்பும் எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும். இந்நிலையில், இரு தரப்பு நட்புறவு ஆழமாகி தொடர வேண்டும் என்றும் லீ ஜிஹெங் தெரிவித்தார்.
யுன்னான் மாநிலமும் இலங்கையும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், மக்களுக்கிடைத் தொடர்பு ஆகிய துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும் அதவேளையில், யுன்னான் மாநிலத்தின் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து, சீன-இலங்கை நட்பு ஒத்துழைப்புறவை வளர்ப்பதிலும் ஆக்கமுள்ள பங்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தலைமை அமைச்சர் விருப்பம் தெரிவித்தார்.