முன்னுரை
சீனவானொலி தமிழ் பிரிவு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் தனது பொன் விழாநிறைவை கொண்டாடுகிறது. அதனையொட்டி நடைபெறும் கட்டுரை போட்டியில் பங்கு பெறுவதில் பெருமிதம் அடைகிறேன்.
சீனவானொலி தமிழ் பிரிவுடன் தொடர்பு:
1986 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இரவு நேரத்தில் வானொலி பெட்டியில் சிற்றலை அலைவரிசையை நகர்த்தி வரும் போது பீஜிங் வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்டேன். உடனே பீஜிங் வானொலி தமிழ் பிரிவுக்கு கடிதம் எழுதினேன். 1987-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் (பொங்கல் திருநாள்) பீஜிங் வானொலி நிலையத்திலிருந்து நேயர் எண் அட்டை, நிகழ்ச்சி நிரல் அட்டை மற்றும் பல வண்ண அட்டைகலோடும் கூடிய முதல் கடிதம் வந்தது அதை இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நிகழ்சிகளை இன்று வரை தொடர்ந்து கேட்டு வருவதற்கு அன்றைய நாட்களில் திரு. S சுந்தரன் அண்ணா அவர்கள் கடிதங்கள் மூலம் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது தான்.
சீன வானொலி நேயர் மன்றக்கருத்தரங்கில் கலந்து கொண்டு திரு. S சுந்தரன் அண்ணா அவர்களை சந்தித்து உரையாடினேன். அவர் என்னை நினைவு கூர்ந்து நாடு திரும்பும் பொது Hero பேனா ஒன்றை கோவை திரு. R சின்னராஜ், பெருந்துறை பல்லவி திரு K பரமசிவம் மூலம் கொடுத்து அனுப்பினர். அதனை இன்று வரை அவரின் நினைவாக பாதுகாத்து வருகிறேன்.
திரு. S சுந்தரன் அண்ணா அவர்களை நேரிலும் கடிதம் மூலமும் பின்னாளில் திரு. S செல்வம், திரு. ராஜகோபால், திரு. பாலகுமாரும் தேனி மாவட்ட நேயர் மன்றத்தை அமைக்க வலியுரிதினார்கள். அதை என்னால் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு மாற்று திறனாளி. தேனி மாவட்டத்தில் நேயர் மன்றம் இல்லாதது மனக்குறைவாக உள்ளது.
நான்கு, ஐந்து நேயர் மன்ற கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போது துணைக்கு ஆட்கள் கிடைக்காததாலும் வேலை பளுவின் காரணமாக நேயர் மன்ற கருத்தரங்குகளில் கலந்துகொள்ள முடியவில்லை... ஆனாலும் சீன வானொலி ஒலிபரப்பில் வழங்கும் கருத்தரங்கு ஒலிபதிவை கேட்டு இன்புறுவேன்.
சீன வானொலி நிகழ்சிகளை கேட்க முடியாவிட்டால் அன்று முழுவதும் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும்...அது போல் நான் எழுதும் கடிதங்களுக்கு பதில் கடிதங்கள் சீன வானொலியில் இருந்து வராவிட்டால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதே மனநிலையில் தான் தற்போதும் இருக்கிறேன். இது எனக்கும் சீன வானொலி தமிழ் வானொலி தமிழ்ப்பிரிவுக்கும் இருக்கும் நட்புறவை, அன்பை வெளிபடுத்துவதாக உணர்கிறேன்...
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நேயர்களாகிய எங்களுக்கு உலகத்தை பார்க்கும் சரளமாக திகழ்கிறது. இதன் மூலம் சீன மற்றும் உலக நாடுகளில் நிகழும் நிகழ்வுகளை கேட்டு அறிந்து கொள்ள முடிகிறது.
வேண்டுகோள்:
நவீன விஞ்ஞான உலகில் சீன வானொலி தமிழ் பிரிவு பல்லுடக வானொலியாக திகழ்ந்தாலும் சிற்றலை பண்பலை ஒளிபரப்பை குறைவாக மதிபிடாது தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் சீன வானொலி தமிழ் ஒளிபரப்பின் பண்பலை ஒளிபரப்பை பொன்விழா பரிசாக விரைவில் தொடங்க ஆவண செய்யுங்கள்..
முடிவுரை:
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இந்திய மக்களும் சீன மக்களுக்குமிடையே நட்புறவுப்பாலம் ஆக முக்காலதிற்கும் திகழ வேண்டும் என்பது அனைத்து நேயர்களின் விருப்பமாகும்.
வாழ்க சீன வானொலி தமிழ் பிரிவு, வளர்க இந்திய சீன நட்புறவு...
அ. இருதயராஜ்