• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எனது வாழ்வில் சீனவனொலி
  2013-06-17 20:52:27  cri எழுத்தின் அளவு:  A A A   
எனது வாழ்வில் சீனவனொலி

எனைப்பற்றி: பெயர்: பி.முத்து வயது:42, படிப்பு:பி.ஏ. ,பணி: பகுதிநேர ஓவிய ஆசிரியர் மற்றும் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளேன். பொழுது போக்கு:வானொலி கேட்பது.திருமணமாகி இருகுழந்தைகள், எம்.பூவரசன், எம்.காவியா, மனைவி: தமிழ்செல்வி மற்றும் அப்பா அம்மா உடன் வேலூர் மாவட்டம் தார்வழி கிராமத்தில் வசித்து வருகிறேன்.

சீனவானொலி தமிழ்பிரிவின் நிகழ்ச்சிகளை நான் 1986 ஆண்டு முதல் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டுவருகிறேன். நான் சீனவானொலிக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமானதுதான். நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கும் போது நான் சிற்றலை வானொலிகளின் நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் வானொலி பெட்டியில் சிற்றலைவரிசையில் டியூன் மெதுவாக செய்து பார்ப்பேன் எதாவது தமிழ்குரல் கேட்டால் நிறுத்தி அதனை கேட்பேன். அப்படி கேட்க்கும் போதுதான் வேறுவிதமான மழலை குரலிலான நமது சீனவானொலியின் ஒலிப்பரப்பினைக்கேட்டேன். அதேபோல் பல வெளிநாட்டு தமிழ் ஒலிப்பரப்பினை கேட்டேன்.

இது இப்படி இருக்க நான் வானொலியுடன் தொடர்பு கொண்டது அதுவும் ஒரு சுவையான அனுபவம்தான். அப்படி வானொலியினை கேட்டுக்கொண்டுவரும்போது வானொலியுடன் தொடர்புகொள்ள அவர்கள் கூறும் தமிழ் பிரிவு,பீகிங்வானொலி, பீகிங், சீனா. என்ற முகவரிக்கு கடிதம் அனுப்ப நான் அஞ்சல் அட்டையினை பயன்படுத்தி கடிதம் எழுதினேன். ஆனால் அது நான் அனுப்பிய வாரத்துக்குள் எனக்கே திரும்பி வந்துவிடும். ஏன் திரும்பி வந்தது என்று கூட தெரியாமல் மீண்டும் அஞ்சல் அட்டையினை பயன்படுத்தி அனுப்புவேன் அதுவும் அதேபோல் திரும்பி வந்துவிடும். அதன் பின்னர்தான் அஞ்சல் நிலைய அதிகாரியினை தொடர்புகொண்டு விசரித்தபோது அவர் சொன்னார் வெளிநாடுகளுக்கு கடிதம் தனிதாபால் உறை உள்ளது அதில் அனுப்பினால்தான் கடிதம் செல்லும் என்று கூறினார். அதன் விலை ரூபாய். 5.50 என்று சொன்னார் அதன்பின்பு அந்த கடித்ததினை வாங்கி அதில் எனது முதல் கடிதத்தினை எழுதினேன். ஒருமாதத்துக்கு பின்னர் எனது நேயர் அடையாள அட்டை நிகழ்ச்சிகுறிப்பு அட்டை வண்ண அட்டை ஆகியவற்றை தாங்கி வந்த முதல் கடித்தத்தினை நான் பெறும்போது நான் அளவிலா மகிழ்ச்சியினை அடைந்தேன்.

அப்போதெல்லாம் நமது சீனவானொலி ஒரு நாள் ஒலிபரப்பினை மறுநாள் இரண்டாவது ஒலிபரப்பாக ஒலிபரப்பு ஆகும். முதல் முதலாக எனது குரலை சீனவானொலியில் கேட்ட போதும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 1992ல் திமிரியில் கண்ணன்சேகர் சீனவானொலி நேயர் மன்ற கூட்டம் நடத்த உள்ள தாக வானொலியில் அறிவிப்பு கேட்டேன். அதில் பங்கு கொண்டு எனது குரலை பதிவுசெய்தேன் அதுதான் எனது சீனவானொலியில் வந்த முதல் முறையாக இடம் பெற்றதாகும். பழனியில் நடைப்பெற்ற நேயர் மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அப்போதைய தமிழ்பிரிவின் தலைவர் சுந்தரன் அவர்களை சந்தித்த‌து எனது சீனவானொலி அனுபவத்தில் சுவையான அனுபவமே. இப்படியாக சீனவானொலிமூலம் முதல் கடிதம் முதல் முறையாக வந்த பரிசு என சீனவானொலி மூலம் பெற்று இன்று நமது சீனவானொலியானது எனது வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்போது எனது பழைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் இப்போதும் சீனவானொலியினை கேட்கிறாயா? என்று கேட்கும்போது நான் மிகுந்த ம்கிழ்ச்சியுடன் கூறுவேன். ஆம் என்று.

நான் தமிழ்பிரிவின் வளர்ச்சியினை நான் கண்கூடாக கண்டு வருகிறேன். 1993ல் பீகிங் வானொலியாக இருந்து சீனவானொலி நிலையாகமாக மாறி இணையம் மூலமாகவும் நிகழ்ச்சிகளை வழங்கி வருவது சிறப்பாக உள்ளது. வானொலியுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் எளிதாகி விட்டது. நமது கருத்துகளை உடக்குடன் தமிழ்பிரிவுக்கு தெரிவிக்க வசதியாகிவிட்டது. பல லட்சம் நேயர்களை நமது தமிழ்பிரிவு கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் ஒன்றே ஒன்றுதான் நான் நினைத்தாற்ப்போல நடக்காமல் போய்விட்டது. எனது திருமணத்தினை தமிழ்பிரிவு பணியாளர்கள் தமிழகம் வரும்போதுஅவர்கள் தலைமையில் நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது என்னால் முடியாமல் போனதுதான் வருத்தம். எனக்குள் ஒரு சின்ன ஆசை நமது தமிழ்பிரிவு பணியாளர்கள் தமிழகம் வரும்போது அவர்களை எனது இல்லத்துக்கு அழைத்து வரவேண்டும் என்பது.

இப்படிக்கு,

தார்வழி , பி.முத்து

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040