• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா வானொலியில் நான் பயணித்த இன்ப கட்டுரை
  2013-06-17 21:00:41  cri எழுத்தின் அளவு:  A A A   
என்னை பற்றி ;

--

எனது பெயர் கே. பிரெஷ்னேவ் , நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் .எனது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் பாக்கம் கோட்டூர் என்னும் கிராமம். நான் முதுகலை பட்டம் படித்து உள்ளேன். தற்போது ஒரு நிதி சேவை நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணி புரிந்துவருகின்றேன் . எனது நேயர் எண் -083058. எங்கள் குடும்பத்தில் நான் , எனது மனைவி திருமதி மனோன்மணி ,எனது அன்பு மகள் ஷிவானினேவ் மட்டும் சீனா வானொலியும் சேர்த்துநா ன்கு நபர்கள் .

என்னை நமது சீனா வானொலிக்கு அறிமுகம் செய்து வைத்தது திரு.பொருநை பாலு 078346 அவர்கள் .

சீனா வானொலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டு வருகின்றேன். மற்ற வானொலிகளை விட சற்று வித்தியாசமாக வானொலி இருப்பதால் இந்த வானொலி மிகவும் என்னை கவர்ந்து உள்ளது.

கரும்பு தின்ன கூலியா என்பது போல நேயர்களுக்கு விலையில்லா விண்ணப்ப கவர் அனுப்பி அனைவரயும் ஈர்த்து உள்ளது.

வானொலியில் நிகழ்ச்சி கேட்க தவறினாலும் அதே நிகழ்சிகளை இணைய தளத்திலும் காண முடிகிறது என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

எல்லோரயும் நேசிக்கலாம் ஆனால் ஒருவரை மட்டுமே சிநேகிக்க முடியும். அதுபோல எல்லா வானொலிகளையும் நேசித்தாலும் சீனா வானொலி மட்டுமே சிநேகிக்கிறேன்.

மேலும் எனக்கு இதன் மூலம் நிறைய வானொலி நண்பர்கள் வட்டாரம் கிடைத்து உள்ளார்கள்.

உண்மையான நட்பு என்பது இன்பத்தை இரட்டிப்பாகிறது துன்பத்தை பாதியாக குறைக்கிறது .இந்த நட்பு வட்டாரத்தி என் வாழ் நாளில் மறக்க முடியாது.

தமிழொலி போன்ற தரமான பத்திரிகை எங்கும் காண இயலாது ,

இந்த அனைத்து இதழ்களையும் படித்து பயனடைந்து பாதுகாத்து வருகின்றோம்.

வாழ்நாளில் யாருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்றால் சீனா வானொலில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் நானும் இதுவரை

ஐம்பதுக்கும் மேற்பட்ட நேயர்களை அறிமுகம் செய்து உள்ளேன்

மாதந்தோறும் நாங்கள் கூட்டம் நடத்தும் போது நாட்டு நடப்புகளையும் உலக விஷயங்களையும் பற்றி அனைவரும் விவாதிப்போம் இதன்மூலம் எங்கள் நேயர் அனைவரும் பொது அறிவு வளர்த்து வருகிறோம் .

செய்தி மற்றும் நிகழ்சிகள் தக்க ஆதாரத்துடன் ,புகைப்படத்துடன் ஒளிபரப்புவது அருமை. திருச்சி இல் நடைபெற்ற 24 வது சர்வதேச வானொலி கருத்தரங்கு கூடத்தில் கொண்டு நேயர்கள் மற்றும் சீனா வானொலி பணியாளர்களை பார்த்தது புதிய அனுபவம் தந்தது .

ஒரு நாட்டின் கலாச்சாரம் பற்றி வானொலி கேட்டு அறிந்து கொள்வது என்றால் அது சீனா வானொலில் மட்டுமே முடியும். கடந்த நான்கு மாதத்திற்கு முன்னால் புதிய நேயர் மன்றம் துவங்க புதுக்குடி எனும் கிராமத்திற்கு சென்றோம் . அங்கு அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்து பழகிய விதம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது மேலும் இன்று வரை எங்களுடன் தொடர்பு வைத்து கொண்டு, அவர்கள் இல்ல மற்றும் விழா காலங்களில் எங்களை அழைத்து உபசரிப்பது நினைக்கும் போது இதற்க்கு காரணம் சீனா வானொலி தமிழ் பிரிவு என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

சீனா உணவு எங்களுக்கு சுவை வித்தியாசமாக இருக்கிறது. அதை நாங்கள் சமயம் சமைத்து அருகில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்வோம் எண்கள் சாப்பாட்டு பட்டியலில் வாரம் ஒரு முறை சீனா உணவு உண்டு அது நல்ல சத்து நிறைந்த உணவு .

தமிழ் பிரிவில் அடிக்கடி பல்வேறு போட்டிகள் வைத்து அதில் ஆர்வமாய் பங்கேற்ற்று, பரிசுகள் கூட வழங்கும் போது

எங்களை ஆர்வத்துடன் பங்கேற்க செய்கிறது . கடந்த திபெத் புத்த மடலாயபொது அறிவு போட்டிகளில் கலந்து கொண்டு MP3 பிளேயர் முதல் பரிசாக பெற்றது எங்கள் குடும்பத்தில் அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

எனக்கு சீனா வானொலிஇல் இருந்து தபால் வந்தால் எங்கள் குடும்ப உறுப்பினர் எங்களுக்கு தபால் அனுப்பியது போல் அன்புடன் வாங்கி அதை படித்து மகிழ்வோம்.

திருநெல்வேலி தலைமை நேயர் மன்றம் சார்பாக திருநெல்வேலி கோடிஸ்வரன் நகரில் கிளை நேயர் மன்றம் சார்பாக மரம் நடுதல் , கோடைகால குடி நீர் பந்தல் அமைத்து எங்களால் முடிந்த சேவையை செய்து வருகின்றோம்.மேலும் திருமதி கலைமகள் அவர்கள் எழுதிய இன்ப உலா என்னும் தமிழ் புத்தகத்தினை நேயர்கள் வழங்கி உள்ளோம்.

எவை எல்லாம் உண்மையனவோ ,புனிதமானவ யோ,தார்மீகமனவையோ ,தூய்மை யானவை ,அன்புமயமனவை ,நல்ல செய்திகளோ, உயர்ந்த பண்புகளோ அங்கெல்லாம் நல்ல அன்பு இருக்கும் இவை எல்லாம் சீனா வானொலில் இருப்பதால் எங்கள் அன்பு எப்போதும் இருக்கிறது .

மொழியாத மொழி ஒரு நாளும் தீங்கு செய்வதில்லை தமிழ் மூலம் சீனா கற்க எனக்கு நிறைய ஆசைகள் இருக்கிறது .

நிகழ்சிகள் மூலம் -நி ஹௌ, என்றால் மரியதிகுரிய சொல் என்றும் - நி ஹொள மா- என்றால் நலம்தான ,-க்கன் சியே - நன்றி என்ற வார்த்தைகளையும் படித்து வருகிறேன் .

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சீனா மொழி ஓரளவு படிப்பேன் என்ற நம்பிக்கை வைத்து உள்ளேன்.

பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்போதுதான் ஒருவன் உண்மையாக வாழ்பவன் ஆகிறான் சீனா வானொலி பலரது வாழ்வில் ஆனந்தம் அடைய செய்துள்ளதால் உண்மையாக வாழ்ந்து வருகிறது.

நான் கடந்த ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா சென்ற பொது அங்கு நிறைய சீனா நண்பர்களை பார்த்தேன் அவர்களது உண்மையான உழைப்பும் , நேர்மையான நடத்தையும் என்னை வியப்படைய வைத்தது. அதுவும் என்னை சீனாவை நேசிக்க வைத்தது .

வசந்த கால புகைப்படம் காணொளி கட்சிகளை பார்க்கும் போது என்னை சீனாவுக்கே அழத்துசென்றது .

என் வாழ்வில் என் குடும்பதுருடன் ஒருமுறையாவது சீனா சென்று அழகை ரசிக்க வேண்டும் என்ற அவளை உள்ளோம்.அதற்காக ஒரு இன்ப பயணம் செல்ல சேமித்தும் வருகின்றோம் .

கே.பிரெஷ்னேவ்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040