• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொன்விழா ஆண்டில் சீன வானொலித் தமிழ்ப் பணியுடனான நட்புறவு
  2013-06-18 17:19:37  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழ்ப் பணியுடன் எண்பதுகளில் துவங்கியது என் நட்புறவு .அதன் பொன்விழாவிலும் தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி . அப்போது இரவு மட்டும் ஒலித்த சிற்றலை ஒலிபரப்பைக் கேட்டு பதினைந்து பைசா அஞ்சல் அட்டை அல்லது அதிக பட்சம் அஞ்சல் உரைகளில் உள்ளூர் முகவரி மூலம் தொடர்புகொண்டு ஒரு மாதத்திற்குள் வானஞ்சலில் பதில் கடிதம் கிடைத்ததில் என்னை போன்ற நேயர்களுக்கு பெரும் மகிழ்ச்சியே. தவிர ,சிரமத்துடன் சிற்றலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைக் கேட்டு அது குறித்த எங்கள் கருத்துகள் வானொலியில் ஒலிப்பரப்பானதிலும் , தமிழ்ப் பணி அவ்வபோது நடத்திட்ட கட்டுரைப் போட்டி ,பொது அறிவு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பரிசுகள் ,சான்றிதழ்கள் , வண்ண காலண்டர்கள் பெற்றமையும் மறக்க இயலா மகிழ்ச்சி அளிக்கும் நினைவுகளாகும் . குறிப்பாக ,சீன அறிவிப்பாளர்கள் தமிழ் கற்று , தமிழில் பேசுவது ,தமிழில் எழதுவது தமிழுக்கு பெருமை !

நான் பெற்ற பரிசுகளில் , சீன பட்டு துணி , சீன வண்ண ஓவியம் , துணிப் பைகள் , வானொலி பெட்டிகள் ஆகியவை அடக்கம் .

அப்போது வானொலி நேயர்களாகிய எங்களுக்கு தமிழ்ப் பணியிடம் கிடைத்த முதல் ,இரண்டாம் பரிசு பொருளான வானொலி பெட்டிகள் கேரளா கோழிகோட்டில் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் , ஹாம் ஆப்ரேட்டர்கள் மாநாட்டில் காட்சி பொருளாய் அமைந்து பெருமை சேர்த்தன .

அதன் பின்னர் தமிழ்ப் பணி சிறப்பு பரிசாக நேயர்களை சீனாவிற்கு இலவச சுற்று பயணம் மேற்கொள்ள ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு இன்று வரை தொடர்கிறது.. அனைத்திந்திய வானொலி மன்றம் , கிளை மன்றங்கள் உதயமாகி சிறப்பாக செயல்பட்டு வருகின்றன .பொன்விழா வேளையில் நேயர்மன்றங்கள் வெள்ளி விழா காண்கின்றன .

நல்ல நண்பர்கள் கிடைத்திட நேயர்களுக்கு தமிழ்ப்பணியும் உதவியாக இருந்தது எனலாம்..

சீனா குறித்து முழுமையாய் அறிய அதன் ஒலிபரப்பும் , தமிழ்ப் பணி நடத்திய கட்டுரை பொது அறிவு போட்டிகள், தமிழ்ப் பணியின் வெளியீடுகள் ஆகியவை உதவியாக இருந்தது ,இப்போதும் இருந்து வருகிறது என்றால் மிகையேதுமில்லை.

அதேபோல் , .நான்கு மணிநேரம் என வளாச்சி கண்ட தமிழ்ப் பணி ஒலிபரப்பும், அதன் தற்போதய இணயத்தள பக்கமும் நேயர்களுக்கு செய்திகளை அறிய சீனாவை அறிய ,பொது அறிவை வளர்க்க உறுதுணையாய் அமைத்துள்ளது என்பதில் வியப்பேதுமில்லை. ஒரு சில நேயர்களுக்கு தமிழ் வாயிலாக சீன மொழியினை கற்க தமிழ்ப் பணி உதவிடுகிறது .

நேயர்களின் பங்கேற்பு நிகழ்ச்சிகளான நேயர் நேரம், நேருக்கு நேர் ,உங்கள் குரல் நேயர் விருப்பம் போன்றவை தமிழ்ப். பிரிவின் நேயர்களுடனான உறவை ஏற்படுத்திடும் நிகழ்ச்சிகள் ஆகும் . அந்த வகையில் தமிழ்ப் பணியின் நேருக்கு நேர் , நேயர் விருப்பத்தில் பங்கேற்றதை என்னால் மறக்க இயலாது.

நான் நீண்டகால நேயராக இருந்த போதும் இடைப்பட்ட பல வருடங்கள் தமிழ்ப் பணியுடன் தொடர்பு கொள்ள இயலாத சூழல் இருத்தால் என்னால் தமிழ்ப் பணியுடனான நட்புறவு குறித்து விரிவாக எழுத இயலவில்லை .

அதனால் , சிறப்பு நேயராக தேர்வு பெற்று சீன பயணம் மேற்கொண்ட நேயர்கள் பலரும் அல்லது சீனா நட்பு பயணம் மேற்கொண்ட நேயர் நண்பர்களும் அறிய தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.

தமிழ்ப் பொன்விழா ஆண்டில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்றதை பெருமையாய் நினைக்கிறேன். சீன வானொலி தமிழ்ப்.பணிக்கு என் பொன் விழா நல்வாழ்த்துக்கள்

நன்றி!

அன்புடன்

நேயர் மு. கணேசன்


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040