• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்பிரிவு இன்று பொன்விழா காண்கிறது
  2013-06-18 19:27:05  cri எழுத்தின் அளவு:  A A A   
அப்போ 70களில் எங்கள் வீட்டில் ( MURPHY ) மர்பி டிரான்சிஸ்டர்

இருந்தது. பெரும்பாலும் அந்த டிரான்சிஸ்டர் வானொலியில் செய்தி மற்றும்

திரைப்பாடல் கேட்பேன். அதே சமயம் அந்த வானொலி பெட்டிக்கு தபால்

அலுவலகத்தில் வரி செலுத்தி இருந்த PASS BOOKஐ நீண்ட நாள் நினைவாக

வைத்திருந்தேன். அதே போல் அப்போதெல்லாம் சாலையில் செல்பவர்களிடம் நேரம்

கேட்கும் வழக்கம் இருந்தது. அகில இந்திய வானொலியில் நேர அறிவிப்பு,

சினிமா பாடல், செய்திகள், வானிலை அறிக்கை, விவசாய செய்திகள்

போன்றவற்றிற்கு தனி மரியாதையும் அதை கேட்க பெரும் ரசிகர் கூட்டமும்

இருந்தது. அதேசமயம் இன்னொரு முக்கியமான விசயம் பாக்கெட் டிரான்சிஸ்டர்.

கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது சென்னை நகர வீதிகளில் பலரும் பாக்கெட்

டிரான்சிஸ்டரை எடுத்து செல்வார்கள். சாலையில் செல்லும் அவர்களிடம்

ஸ்கோர் கேட்டு மகிழ்வது தனி மகிழ்ச்சி. மொத்தத்தில் வானொலிப் பெட்டி

என்பது அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டின் வரவற்பறையையும் அலங்கரித்து

கௌரவத்தின் அடையாளமாய் விளங்கியது. எவ்வளவு தான் தொழில்நுட்பம்

மாறினாலும் வளர்ச்சியடைந்தாலும் வானொலி இன்றளவும் உலக விரும்பும் உன்னத

பொருளாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

.

சொன்னா நம்ப மாட்டீங்க எங்க வீட்டுல இருந்த மர்பி ரேடியோவில் SW BAND

இருந்தாலும் அதை கேட்க முயற்சித்ததில்லை. அப்புறம் பாருங்க 1975ல் தான்

தொலைக்காட்சி சென்னை நகரில் அறிமுகமானது. ஆனால் எல்லோர் வீடுகளிலும்

தொலைக்காட்சி வர நீண்டநாள் ஆனது. . . நீண்டநாட்களுக்கு பீறகு எங்கள்

வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டி வந்தது. 1985 லிருந்து எனது வானொலி

கேட்கும் விதமே மாறிப் போனது. ஆமாங்க.. ஊருக்கு போன அம்மா அந்த முறை எங்க

மாமா வீட்டிலிருந்த வால்வு ரேடியோவை கொண்டு வந்தார். அதன் பெயர்

ஞாபகமில்லை. மத்திய அலை ( MW ) கணீர் என ஒலிக்கும். வால்வு ரேடியோ ஆன்

செய்த உடன் ஒலிக்காது. சிறிது நேரம் சூடான பின் பச்சை நிற விளக்கு

முழுதும் எரியும். டியூப் லைட் போட்டால் இரைச்சல் வரும். PLUGஐ மாற்றி

போட்டால் சாக் அடிக்கும். ஒருநாள் அந்த வால்வு ரேடியோவின் SW1, SW2

பேண்டுகளை திருகி பார்த்தேன். ஏராளமாய் வானொலி ஒலிபரப்புகள் பல்வேறு

மொழிகளில் கேட்டது. ஆஹா சுவராசியமா இருக்கே என்று அதற்கு ஆண்டெனா வாங்கி

மாட்டினேன். ஏராளமான தமிழ் மற்றும் ஆங்கில ஒலிபரப்புகளை தேடி தேடி

கண்டுபிடித்து கேட்டு மகிழ்ந்தேன்

.

.

அப்போதும் எனக்கு சிற்றலை , அலைவரிசை, மீட்டர் என்றெல்லாம் எனக்கு

எதுவும் தெரியாது. எந்த வானொலி எத்தனை மணிக்கு ஒலிபரப்பாக துவங்கும்

என்பதை கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் கஷ்டப்பட்டேன். ஒரு வழியா RADIO

PEKING, BBC, R. MOSCOW போன்ற தமிழ் வானொலிகளை தொடர்ந்து கேட்க

ஆரம்பித்தேன். அப்புறம் ஒரு நாள் வானஞ்சலில் சீன வானொலிக்கு

நிகழ்ச்சிநிரல் கேட்டு ஒரு விமர்சன கடிதம் எழுதினேன். ஒருமாதம் கழித்து

அந்த கடிதம் illeligible to delevery என எனக்கே திரும்பி வந்தது.

வருத்தத்துடன் வாங்கி பார்த்தேன். தவறு என் மீது தான். சீன வானொலி.

தமிழ்பிரிவு, பீகிங் .சீனா என தமிழில் TO ADDRESSல் எழுதியிருந்தேன்.

பின் 070745 என்ற நேயர் எண் வாங்கினேன். தொடர்ந்து சீன வானொலியின்

வருடாந்திர போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றேன். மற்றவர்களையும் கேட்க

சொல்லி போட்டிகளில் பங்கேற்க தூண்டினேன். நண்பர் ஒருவர் சொன்னார் CRI

தமிழ் பிரிவின் மாதாந்திர கேள்வி பதில் போட்டியில் வெல்வது கடினம்

என்றார். நானும் 3 வினாக்களுக்கு விடையளித்து போட்டியில் வென்றதாக

அறிவித்தார்கள். ஆனால் அதற்கான சான்றிதழோ பரிசோ வரவில்லை.

அத்துடன் மாதாந்திர கேள்விபதில் போட்டியையும் நிறுத்தி விட்டார்கள். சீன

வானொலி பற்றி வெளிவரும் பத்திரிக்கை செய்திகளை சேகரித்தேன். அதேபோல் சீன

வானொலி பற்றிய கட்டுரைகளை சிறு பத்திரிக்கைகளில் எழுதினேன். பல்வேறு

சமயங்களில் தமிழ்பிரிவின் தொலைபேசி உரையாடல்களில் நேயராக பங்கேற்று

பேசியிருக்கிறேன். பாண்டிச்சேரி, திருச்சி. ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில்

நடந்த சீன வானொலி கருத்தரங்களில் நண்பர்களை அழைத்து சென்று

பங்கேற்றிருக்கிறேன். சீன வானொலி அனுப்பிய தமிழ்ஒலி , நிகழ்ச்சி நிரல்களை

இன்றும் சேகரித்து வைத்துள்ளேன். சீன வானொலி மூலம் ஏராளமான நேயர்

நண்பர்கள் கிடைத்தனர். CRI SMS NET மூலம் பல அரிய தகவல்களை பெற்றேன்.

கலைமகள் அவர்களின் சீனாவில் இன்ப உலா புத்தகம் வெளியானதும் முதலில்

சென்று வாங்கினேன். ஒரு வாரகாலம் புத்தக கண்காட்சியில் நண்பர்

ஜெய்சக்திவேலுடன் சென்று ஊடகங்களுக்கு அப்புத்தகத்தை அறிமுகம் செய்து

மகிழ்ந்தேன். இந்திய சீனா நட்புறவை வளர்க்கும் தமிழ்பணிக்கு

வாழ்த்துக்கள். தித்திக்கும் முத்தமிழை திக்கெட்டும் ஒலிபரப்பும் சீன

வானொலி தமிழ் பிரிவிற்கு பாராட்டுக்கள். வாழ்க தமிழ் மொழி. வளர்க இந்திய

சீன நட்பொலி.

HISTORY MAKES A HISTORY.

வரலாறு என்பது எழுதபடுவதில்லை. அன்றாட முக்கிய சம்பவங்களின் பதிவே வரலாறு.

சீனாவின் நடப்பு நிகழ்வுகளை ஊருக்கும் உலகுக்கும் சொன்ன சீன வானொலி

தமிழ்பிரிவு இன்று பொன்விழா காண்கிறது.

கே.ராஜா

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040