வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்துகொள்ளும் ஹாங்காங் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒரு முக்கியமான நாடாக கருதப்படுகிறது. பிரிட்டன் வசம் இருந்த ஹாங்காங்கை திரும்ப சீனாவிற்க்கு தந்துவிட்டாலும் ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது சீனா. ஒரு நாடு இரு அமைப்பு என்ற முறையில் படிபடியாக கம்யூனிஸத்தை அமல்படுத்தி வருகிறது.
பிரிட்டனின் தாக்கத்தால் இந்த சீன மக்களுக்கு ஆங்கிலம், காண்டனீஸ், போர்ச்சுகீசியம், மாண்டரின் தெரிந்திருக்கிறது. இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்திலேயே ஹாங்காங்கில் வாணிகம், தொழில்கள் செய்து குடியுரிமை பெற்று வாழ்க்கிறார்கள். ஹாங்காங் ஏர்போர்ட் கடலும், மலைகளும் சூழ்ந்த விமான பாதை தளமாக இயற்கையுடன் இணைந்து காணப்படும் விமான நிலையம் ஆகும். இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும்.ஆன இந்த பிரதேசத்தை செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கி மணல் நிரவி ஹாங்காங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.
சுற்றுலா தொழில்கள் மிக அபரிதமாக வளர்ந்து வருகிறது. 1998 ஆண்டில் தொடங்கிய மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் கட்டப்பட்டு 2003 திறப்பு விழா நடத்தப்பட்டது. மாலை வேளைகளில் ஹாங்காங் துறைமுகத்தை ஒட்டிய சொகுசு கப்பல் சாவாரியும், மின்விளக்குக் காட்ச்சிகளும் மனதை ரம்மியக்க வைக்கும்.