• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்
  2013-06-24 10:10:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங் பூங்கா நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். பிரிட்டன் ஆட்சியில் இருக்கும் போது கட்டப்பட்ட இந்த பூங்கா தற்கால வசதிகளுடன் கட்டுவிக்கப்பட்ட பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், நீர்வீழ்ச்சி குகை, பறவைகளில் இருப்பிடம் என்று ஏராளாமான பகுதிகள் இருக்கின்றன. இது உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் இடமாக உள்ளது.

தியன் தான் புத்தர்

இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு ஆரம்பித்தன. 1993 டிசம்பர், 29ம் தேதி இதன் கட்டு பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா ஹாங்காங், தாய்வான, இந்தியா, ஜப்பான, கொரியா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்து விழாவை சிறப்பித்தனர். மூன்று மாடி கட்டிடங்களில் வட்டவடிவிலான வெங்கலத்திலான தமரை பூவின் மேல் புத்தர் அமைந்திருக்கும் சிலை அமைப்பு இருக்கிறது. முதலாவது தளத்தில் தேவர்கள் புத்தருக்கு விளக்கு, பழம் போன்றவற்றை அர்பணிக்கும் உருவங்களும் உள்ளது.

இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் ஸ்வஸ்திக் சின்னமும் இருந்த்து. புத்தர் முகம் வடக்கு நோக்கி திரும்பியதாக இருக்கிறது. இந்த புத்தர் கோவிலுக்கு கேபிள் கார் மூலமாக செல்லலாம். இந்த பயணம் 5.7. கிலோ மீட்டர் நீளமுடையவை. அடர்ந்த காட்டிலும், மலைபாதைகளிலும் கட்டப்பட்ட இந்த கேபிள் கார் இணைப்புக்கள் மலையில் குறுக்கிலும் வளைந்தும், நெளிந்தும் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பயணத்தின் திசைகளில் மாற்றம் ஏற்படும்போதும் 5 ஜங்ஷன் இருக்கிறது. அதன் மூலம் பயண பாதைகள் திசைகளின் மாற்றத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மலைகளிலும், கீழே ஓடும் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்துகொண்டே செல்லும் இந்த நீண்ட பயணம் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு பயத்தையும் ஏற்படுத்துகிறது. சர்ச், மசூதிகளும் ஹாங்காங்கில் உள்ளது. ஹிந்துகளுக்கென்று இஸ்கான் கோவிலும் உள்ளது. வாடகை வீட்டையே கோவிலாக மாற்றி கிருஷணா உருவச்சிலைகளும், பிரபு பாத அவரின் உருவச்சிலையும், சீன பெண்களாலும், சீன ஆண்களாலும் தினபடி வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றது. சத்ய சாயியின் சென்டரும் பக்தர்களால நடத்தப்பட்டு வருகிறது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040