• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்
  2013-06-24 10:10:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங்கில் ரயில்வே நிலையத்தில் சென்டிரலில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன் விக்டோரியா பீக் என்ற இடத்திற்க்கு இருக்கும் மெழுகு சிலையை பார்ப்பதற்கு மலைபாதையில் செல்ல டிராம் வண்டி இருக்கிறது. வண்டிபாதை மலைபகுதிகளில் பயணிப்பதினால் நாமும் இயற்கையை ரசித்து கொண்டு செல்லலாம். மேலே செல்ல செல்ல என்ன உயரத்தில் பயணிப்பது ஒருவகையான சந்தோசம் தான். ஏதோ ஒரு வகை பயத்தில் நாம் இன்னும் இருக்கமாக ஒட்டுக்கொண்டு நம் இருக்கையை பிடித்துகொண்டிருப்போம் எங்கே விழுந்துவிடுவோமோ என்று. இங்கு அப்படியே பயணத்தின் போதே இந்த தீவின் அழகையும் வானவீதியில் பலவகையான மககூட்டங்களின் வர்ணஜாலங்களை ரசித்துவிடலாம்.

அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கு கண்கவரும் ஓவியங்கள், கைவினை பொருள்கள், எல்லாம் கிடைக்கின்றன. முதலில் இங்கு உள்வருவதற்கு முன் வாயிலிலேயே ஒருவர் கையை கட்டிகொண்டு நின்றிருந்தார். நாங்கள் அவரை நிஜமாக ஒருத்தர் நின்றுகொண்டிருக்கிறார் என்று நினைத்தோம். என்னடா ஆடாமல் அசையாமல் இருக்கிறாரே என்று நினைத்தால் அவரும் மெழுகு சிலை என்று புரிந்து அட என்று ஆச்சரியப்படாமல் எங்களால் இருக்க முடியவில்லை. பூரூஸ்லி, ஜாக்கிசான், பீட்டில்ஸ், காந்திஜி,மாவோ, டயானா, ஐஸ்டின், அமிதாப்பட்சன், போன்றவர்களின் உருவங்கள் தத்ரூபமாக வியக்க வைக்கிறது.

நோவாவின் பேழை என்ற இடம் மாவன் தீவில் உள்ளது. இது சென்ட்ரலில் இருந்து கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற எண்ணிய கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்பட்ட கப்பல் "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040